முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை – புதிய தலைமைச்செயலாளர் யார் ?

தமிழக தலைமைச்செயலளராக வெ.இறையன்பு பணியாற்றி வருகிறார். கடந்த 1988-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த சில நாட்களில் அடுத்த தலைமைச் செயலர்யார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் அடுத்த தலைமைச்செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாக செயலாளர் சிவதாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமைச்செயலாளர், டிஜிபி ஆகியோர் ஓய்வு பெறுவதால் புதிய அதிகாரிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தலைமைச்செயலாளர், டிஜிபி தேர்வு தொடர்பாக உள்துறை செயலர் அமுதா தலைமையிலான குழு டெல்லி சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்