அமேதி:
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ஏகே-203 தாக்குதல் துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் நிறுவனம் (ஐஆர்ஆர்பிஎல்) 2019-ல் நிறுவப்பட்டது.
இந்திய-&ரஷ்ய கூட்டு நிறுவன ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் துப்பாக்கிக்கு ‘ஷெர்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஐஆர்ஆர்பிஎல் தலைமைச் செயல் அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.கே. சர்மா சமீபத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் இது பெருமைமிக்க தருணம்.
100% இந்திய உதிரி பாகங்கள் மற்றும் உள்ளீட்டுப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட முதல் ஏகே-203 (ஷெர்) துப்பாக்கியை வெற்றிகரமாகத் தயாரித்து சுட்டுப் பார்த்துள்ளோம். அடுத்தகட்டமாக, செப்டம்பர் 2026-ல் ராணுவத்தின் பரிசோதனைகளுக்காக ஒப்படைக்க, தேவையான எண்ணிக்கையிலான துப்பாக்கிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஏகே-203 என்பது 7.62ஜ்39மிமீ, கலஷ் நிகோவ் தளத்தை அடிப்படையாகக் கொண்ட எரிவாயு மூலம் இயங்கும் தாக்குதல் துப்பாக்கியாகும். இது நிமிடத்துக்கு 700 சுற்றுகள் சுடும் திறனையும், 800 மீட்டர் வரம்பையும் கொண்டுள்ளது.

ரேஷன் கார்டுகளில் இதுவரை கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு 29ம் தேதி சிறப்பு முகாம்
சென்னை:தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகள்






