ரேஷன் கார்டுகளில் இதுவரை கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு 29ம் தேதி சிறப்பு முகாம்

சென்னை:
தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகள் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் ரேஷன் கடைகளில் இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை பெற்று வருகின்றனர்.
போலி குடும்ப அட்டைகள் மற்றும் போலியான பெயர்கள் மூலம் பொருட்கள் பெறுவதைத் தடுக்கும் வகையில், ஆதார் அடிப்படையிலான மீரிசீசி சரிபார்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் முதல் குடும்ப அட்டை உறுப்பினர்களின் கைரேகை அடிப்படையிலான மீரிசீசி பதிவு நடைபெற்று வருகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் அடிப்படையில், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21 சதவீத மீரிசீசி பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மீதமுள்ள பயனாளிகளின் மீரிசீசி பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், வரும் 29.08.2026 அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், இதுவரை கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று மீரிசீசி சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றும் இதுவரை மீரிசீசி செய்யாதவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.