முதல்-வர் விஜய் அலுவலகம் மாற்றப்படுவது ஏன்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சென்னை,
புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகம் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்ட உள்ளது. இதற்காக, மாளிகையின் 10-வது தளத்தில் புதிய முதல்-அமைச்சர் அறை, தனிச் செயலர்களுக்கான அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல்வரின் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகளுக்காக ரூ.5.54 கோடியில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை டெண்டர் கோரியிருந்தது. தமிழக அரசின் பொதுப்பணித் துறை கோரிய இந்த டெண்டரில் பல்வேறு முறைகேடுகளும் விதிமீறல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்து பேசியதாவது:-
“திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், பத்திரிகை செய்தியைக் குறிப்பிட்டு பேசினார். கடந்த 5 ஆண்டுகள் பத்திரிகை செய்திகளை எடுத்து வெளியிட்டால், இந்த துறை (பொதுப்பணித் துறை) ஊழல் மட்டும்தான் செய்திருக்கும் என்று எங்களாலும் சொல்ல முடியும். டெண்டரே இன்னும் முடியவில்லை. பொதுவாக கட்டுமான தொகைக்கு ஏற்ப டெண்டரின் மொத்த மதிப்பை வெளியிடுவார்கள். 3-லிருந்து 7 சதவிகிதம் வரை ஏற்றுவார்கள். ஆனால், நாங்கள் கடந்த ஆண்டு மதிப்பையே கொடுத்துள்ளோம்.
விரைவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் கடந்த 5 ஆண்டுகள் டெண்டரில் என்ன நடந்தது என்பதை வெள்ளை அறிக்கையை வெளியிடவுள்ளோம். கடந்த 60 நாள்களில் 20 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. சுமார் 25-லிருந்து 30 சதவிகிதம் வரை குறைவான தொகையில் டெண்டர் வந்து கொண்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள். இதில் அனைவருக்கும் உடன்பாடு இருக்கிறது. காலையிலிருந்து மாலை வரை அரசு அதிகாரிகளையும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் முதல்-வர் சந்தித்து வருகிறார்கள். அனைவரையும் சந்திக்க வேண்டுமென்பதால்தான் அறையை மாற்றுகிறார்கள்.
முதல்வரின் தனிச் செயலர்கள் வெறும் 100 சதுர அடிகூட இல்லாத சிறிய அறையில் பணி செய்து கொண்டுள்ளார்கள். முறையான கழிப்பறை வசதிகூட கிடையாது. ஆகையால்தான் அவர்களுக்கும் அறை மாற்றப்படுகிறது. பிரசாரத்தின் போது சாதாரணக் கடைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு, பிரசார வாகனத்திலேயே இரண்டு மணிநேரம் ஓய்வெடுக்கக் கூடிய எளிய முதல்வரைப் பற்றி தவறான தகவலை அவைக்கு தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

வேளாங்கண்ணி மாதா ஆலய ஆண்டு திருவிழா: சைதை பாதயாத்திரை குழுவினர் சமபந்தி விருந்து

சைதாப்பேட்டை:நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம்

தவெக ஆட்சியில் 6 காவல் மரணங்கள்; இனியும் நடக்காமல் அரகூ தடுக்க வேண்டும்; அன்புமணி

சென்னை:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை சிந்தாமணி காவல் நிலையத்துக்கு

டெண்டருக்கு முன்பே முதலமைச்சருக்கான புதிய அறை பணிகள் தொடங்கியது எப்படி?: – டி.டி.வி. தினகரன் கேள்வி

சென்னை:தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்னரே

கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: முதல்வர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு:கர்நாடக மாநிலம் சாம்​ராஜநகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​யுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில்

செய்தியாளர்களை தாக்கிய தவெக எம்எல்ஏ கபில் மீது 21 நாட்களுக்குப் பிறகு வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்,