மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். அப்போது அவர், “எங்களுக்கு மின்சாரம் வேண்டும்… ஆனால் தண்ணீர் வேண்டாமா? பெரும் வெள்ளத்தைக்கூட நாம் தாங்கிவிடலாம், ஆனால் கொடூரமான வறட்சியை எவ்வாறு தாங்குவது? தண்ணீர் இல்லாமல் மக்கள் எப்படி வாழ முடியும்? நம் மாநிலத்தின் நெய்வேலி நிலக்கரி, மீத்தேன் வளம் மற்றும் அணு உலைகளில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் அனைவருக்கும் தடையின்றிப் பகிர்ந்தளிக்கப்படுகிறது; ஆனால், நமக்கான நீர்வளம் மட்டும் அவர்களுக்குத் தான் என்ற நிலை நீடிப்பதை எத்தனை காலம்தான் நாம் சகித்துக் கொள்வது?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்கவும், மேகதாது அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு உடனடியாக உறுதியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் கல்லணையைக் கரிகால் சோழன் கட்டிய காலத்தில் கன்னட மொழியே கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காவிரி ஆறு என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் நிலத்தின் வழிவழியான வாழ்வாதார உரிமை என்பதைக் சுட்டிக்காட்டிதமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றுச் சான்றுகளையும் கரிகாலனின் பெருமைகளையும் குறிப்பிட்ட அவர், காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து வருவதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டியதுடன், நமது நியாயமான நதிநீர் உரிமைகளை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட