மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார்.

டெல்டா விவசாயிகளின் பயிர்களின் பாசனத்திற்கு முக்கியமாக கருதப்படுவது மேட்டூர் அணை. இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைவாக இருந்ததால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1 (இன்று) தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், தொடர்ந்து 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சேலம் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து வேனில் சாலை மார்க்கமாக பூசாரிப்பட்டி பிரிவு, வள்ளையூர்கோட்டை, ஜோடுகுளி, தீவட்டிப்பட்டி, மேச்சேரி வழியாக அவர் மேட்டூர் வந்தார்.
முதலமைச்சர் விஜய்யின் சேலம் வருகையையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் இருந்து மேட்டூர் வரை சாலையில் இருபுறமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. திறந்த வேனில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு முதலமைர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபக்கங்களிலும் கூடியிருந்த ஏராளமான பொதுமக்களும், தவெக தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் மேட்டூர் அணை வந்த முதலமைச்சர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் வலது கரையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை அவர் திறந்து வைத்தார். அணை திறக்கப்பட்டதும் வெளியேறிய காவிரி நீரில் மலர்கள் மற்றும் நெல்லை தூவி முதலமைச்சர் விஜய் வரவேற்றார்.

பாதியில் விடப்பட்ட சைதாப்பேட்டை அம்மா பூங்கா; முதியவர்கள், குழந்தைகள், வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் திறப்பது எப்போது?

சென்னை:சென்னை கோடம்பாக்கம் மண்டலம், 140வது வார்டு சைதாப்பேட்டை-&கோடம்பாக்கம் சாலையில், 2016ம் ஆண்டு, அ.தி.மு.க.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

சேலம்:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார்.

போராடும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

சென்னை:தமிழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் குணசேகன் இல்லத்திருமண விழா: நண்பர்கள் பங்கேற்று வாழ்த்து

சென்னைசென்னை நந்தனம் கலைக்கல்லூர் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான ஆர்.குணசேகரன்&பானுமதி தம்பதியரின் மகன் கு.தீபக்கிற்கும்

டான்னோ, டாப்செட்கோ மூலம் கடன் வழங்கும் முகாம்: திண்டுக்கல் கலெக்டர் தகவல்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான் மையினர்களுக்கு டாம்கோ,