வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று சீமான் ஆஜர்… போலீஸ் குவிப்பு… பரபரப்பு…

சென்னை:
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகும் நிலையில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். 8 முறை தான் கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி கூறியதை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இதனையடுத்து சீமானை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன்கள் அனுப்பினர். ஆனால் சீமான், 2011-ல் முடித்து வைக்கப்பட்ட புகாரை ஏன் மீண்டும் விசாரிக்க வேண்டும்? புதியதாக நீதிமன்ற ஒப்புதல் கடிதம் தந்துள்ளதா? என கேட்டிருந்தார்.
இதனிடையே திடீரென சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுக் கொண்டு பெங்களூரு சென்றுவிட்டார். சீமான் தமக்கு பணம் தரவில்லை; ஆனால் போலீஸ் நடவடிக்கை மந்தமாக இருக்கிறது. சீமானை என்னால் எதிர்க்க முடியாமல் தோல்வி அடைந்துவிட்டேன் என நடிகை விஜயலட்சுமி கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக சீமான் இன்று விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார். இதற்காக வளசரவாக்கம் காவல் நிலையப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியினரும் பெருமளவில் திரண்டுள்ளனர். ஆனால் சீமானுடன் 5 வழக்கறிஞர்கள் மட்டுமே காவல்நிலையத்துக்குள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வளசரவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65