விமானப் படை பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு இந்திய அமெரிக்கர் ராஜா ஜே சாரி பெயரை பரிந்துரை செய்த அதிபர் ஜோ பைடன்…!

இந்திய அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா ஜே சாரியை விமானப் படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு நியமிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது கர்னலாக இருப்பவர் ராஜா ஜே சாரி அவர்கள். அவரின் வயது 45, விண்வெளி வீரர். இந்த இளம் வயதில் இவரை அமெரிக்க விமானப் படையில் மிக முக்கியமான பிரிகேடியர் ஜெனரல் பதவியில் நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இதற்கான பரிந்துரையை அதிபர் பைடன் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சிவில் மற்றும் ராணுவ உயர் பதவிகளுக்கான நியமனங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்படி, அதிபர் பைடன் பரிந்துரைத்துள்ள ராஜா ஜே சாரி நியமனத்துக்கும் செனட் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் அரிவித்துள்ளது.

ராஜா ஜே சாரி தற்போது டெக்சாஸில் உள்ள ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் ‘க்ரூ-3’ பிரிவில் கமாண்டராகவும், விண்வெளி வீரராகவும் இருந்துவருகிறார். மாசாசூசெட்ஸில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஏரோநாட்டிக்ஸ் படிப்பில் முதுநிலை பட்டமும் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க கப்பற்படை சோதனை விமானி மையத்தில் பட்டமும் பெற்றுள்ளார்.

இவரது தந்தை ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஆவார். தனது இளம் வயதில் இன்ஜினீயரிங் பட்டப்படிப்புக்காக அமெரிக்கா வந்து நன்கு படித்து வாட்டர்லூ பகுதியில் கடைசி காலம் வரை வாழ்ந்தார். அவரது தூண்டுதலால் ராஜா ஜே சாரி ஏரோநாட்டிக்ஸ் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட தொடங்கினார். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்துக்கான ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-3 மிஷனுக்கு ராஜா ஜே சாரி நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப் படை தளத்தில் 461-வது ஃப்ளைட் டெஸ்ட் ஸ்குவாட்ரனின் தளபதியாகவும், எஃப்-35 ஒருங்கிணைந்த சோதனை படை இயக்குநராகவும் சாரி பணியாற்றி உள்ளார். தவிர விமானங்களை சோதனை அடிப்படையில் இயக்கி, அவற்றின் செயல் திறனை அறியும் டெஸ்ட் பைலட்டாகவும் செயல்பட்டுள்ளார். இளம் வயதிலேயே 2,500 மணி நேரங்களுக்கும் மேலாக விமானங்களை இயக்கி உள்ளார். தற்போது 45 வயதில் அமெரிக்க விமானப் படையின் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு அதிபரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவி விமானப் படையில் ஒரு நட்சத்திர அந்தஸ்து கொண்டது. இது கர்னல் பதவிக்கு ஒருபடி உயர்வானது ஆகும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத