விரைவில் கிறிஸ்தவர்களின் அரசியல் மாநாடு – மக்கள் மேம்பாட்டு கழகம் அறிவிப்பு

கிறிஸ்தவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்தால் தான் கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் பேச முடியும் என்பதால் பேராயர்கள் தலைமையில் கிறிஸ்தவர்களின் அரசியல் மாநாடு விரைவில் அறிவிக்கப்படும்.

மக்கள் மேம்பாட்டு கழகம் கொள்கை விளக்க கருத்தரங்கமும் முகாம் கட்டமைப்பும் வீராரெட்டிக்குப்பம் மாணிக்கம் மஹாலில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

உப தலைவர் இருதயராஜ் ஒருங்கிணைத்தார் அப்போது கனல் கலைக்குழு சமூக செயல்பாட்டாளர் பெஞ்சமின் சின்னப்பராஜ் ஆசிரியர் சகோதரர் முருகவேல் கொள்கை பாடல்களை வழங்கினார்கள் காலை 10 மணி முதல்
3மணிவரை கருத்தரங்கம் நடைபெற்றது. இருதயம் வல்லரசு வழக்கறிஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இருதயசாமி வழக்கறிஞர் MMK மும்பை மாநில செயலாளர் ஆபேல் DCLM மாவட்ட செயலாளர் மோரிஸ் வளரும் தலைவர் ராஜா ரஃபி NCDC இளைஞரணி மாநில செயலாளர் ஆசிரியர் அற்புதராஜ் கருணை கரங்கள் ஆசிரியை கரோலின் கிறித்தவ மக்கள் முன்னணி மாநில செயலாளர் ராயப்பன் வன்னிய கிறித்தவ பேரவை ஸ்டாலின் DCLM விருதை வேதமாணிக்கம் கிருஷ்ணன் குப்பம் ரஃபி ராஜா வடலூர் அந்தோணி சாமி கொளக்குடி ஜோசப் அல்போன்ஸ் அஸ்வின் அசோக் ராஜி MMK இளைஞரணி ஜெரி லூயிஸ் இளவரசி நிர்லா பிரியா கொக்காம்பாளையம் பிச்சை அந்தோணி பாலக்கொல்லை முத்துசாமி ஈசாக்கு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இந்த கருத்தரங்கில் புதுவை கடலூர் உயர் மறை மாவட்டத்திலிருந்து பல்வேறு பங்குகளிலிருத்தும் விழுப்புரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். விராரெட்டிகுப்பம் முதனங்குப்பம் கொக்காம்பாளையம் கோவிலாகும் பாலக்கொல்லை மட்டிகை விருத்தாசலம் வடலூர் கிருஷ்ணன் குப்பம் அழகப்பசமுத்திரம் விளாங்காட்டூர் ரோமாபுரி நெய்வேலி -2 நெய்வேலி டவுன்ஷிப் நறுமணம் வாணாதிராயபுரம் கொளக்குடி கோவிலானூர் ஆகிய கிராமங்களில் இருந்து கலந்து கொண்டனர் ஒவ்வொரு ஊரிலிருந்தும் வருகை தந்த தலைவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது அவர்கள் பேசும் போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் கிறிஸ்தவர்களின் வாக்கு யாருக்கு என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மக்கள் மேம்பாட்டு கழகம் MMK தேசிய தலித் கிறிஸ்தவ பேரவை NCDC தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கம் DCLM
இணைந்து புதுவை கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் பிரான்ஸ் காலிஸ்ட் தலைமையில் தமிழக ஆயர் பேரவை ஒருங்கிணைக்கும் மாநாட்டை பேரருட் தந்தை பிலோமின்ராஜ் அடிகள் அருட்தந்தை சாமிநாதன் அருட் தந்தை தேவசகாயராஜ் அடிகள் அருட் தந்தை தெய்வநாயகம் மற்றும் மறைமாவட்ட நிர்வாக தந்தையர்களோடும் தலைவர்களோடும் கலந்து பேசி மாநில மாநாடு நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டும் பேராயர் அவர்களை நேரில் சந்தித்து மாநாட்டு
குழு அமைக்க வேண்டும் என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிறிஸ்தவர்களை அரசியலில் வளர விடாமல் தடுத்து வரும் தடைகள் எது அதை எப்படி களைவது என்றும் பேசி இனியாவது பிற கட்சிகள் கொடுக்கும் போலியான வாக்குறுதிகளை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாற்ற கூடாது தமிழக ஆயர் பேரவை கிறிஸ்தவ தலைவர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அனைத்து கிராம நிர்வாகளும் மத்திய மாநில அரசுகள் கிறிஸதவர்கள் இட ஒதுக்கீடு மற்றும் அரசு பணிகளில் புறக்கணித்து வருவதை புள்ளி விவரங்களுடன் விளக்கினார்கள் குறிப்பாக ஆசியர்களின் பிரச்சினைகளில் அரசு காட்டிவரும் மெத்தன போக்கை சுட்டி காட்டினார்கள்.

தீர்மானங்கள் :-
அரசியலில் கிறிஸ்தவர்கள் தனி கட்சி அங்கிகாரம் பெற வேண்டும் அதற்கு தேவையான பணிகளை முன்னெடுக்க பட வேண்டும் அனைவரும் முன்டுக்க வேண்டும். தமிழக ஆயர் பேரவை எடுக்கும் அரசியல் முடிவே அனைத்து கிறிஸ்தவர்கள் முடிவாக மக்கள் மேம்பாட்டு கழகம் அதை ஆதரிக்கும். தமிழக அரசு 2024 தேர்தலுக்கு முன்னர் 3.5 % இட ஒதுக்கீட்டை திருப்பி தர வேண்டும். தமிழக ஆயர் பேரவை மற்றும் புதுவை கடலூர் மறை மாவட்ட பேராயர் மேதகு பிரான்சிஸ்காலிஸ்ட் அவர்களின் வழி காட்டி மாநாடு நடந்தத ஆதரவு அளிப்பது.

அனைத்து சமூகத்தையும் இணைத்து மக்கள் மேம்பாட்டு கழகத்தின் கொடி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுவது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

விரைவில் கிறிஸ்தவர்களின் அரசியல் மாநாடு – மக்கள் மேம்பாட்டு கழகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச