வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு : காவல்துறையினர் தங்கள் பணிகளை சரியாக செய்யவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள செம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பரிமளா. கணவரை இழந்த இவர் வெளியூரில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வீட்டுக்கு வருவார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் தான் வீட்டில் இருப்பார்கள். நேற்று முன்தினம் இரவு அதே ஊரில் உள்ள தனனுடைய மாமா வீட்டில் தூங்கி விட்டனர். நேற்று காலை அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. மகள்களின் திருமணத்திற்காக பரிமளா நகை, பணத்தை சேமித்து வைத்திருந்தார். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுராந்தகம் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபடுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்