வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் (எப்சிஆர்ஏ) மசோதா: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி:
வெளி​நாட்டு நன்​கொடைகளுக்கு கட்​டுப்​பாடு​களை விதிக்​கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ) காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.
தற்​போது சட்​டத்​தில் மேலும் 3 திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டு, வெளிநாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா 2026 (எப்​சிஆர்ஏ) வரையறுக்​கப்​பட்டு உள்​ளது. இந்த திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்டு நிலுவை​யில் உள்​ளது.
வெளி​நாட்டு நன்​கொடைகள் மூலம் எந்த மாநிலத்​தில் என்​னென்ன தொண்​டுப் பணி​கள் மேற்​கொள்​ளப்பட உள்ளன என்​பதை தொண்டு நிறு​வனங்​கள் (என்​ஜிஓக்​கள்) உறு​தி​மொழி பத்​திர​மாக தாக்​கல் செய்ய வேண்​டும்.
வெளி​நாட்டு நன்​கொடைகளை ஒரு​போதும் மதமாற்​றத்​துக்கு பயன்​படுத்​தக்​ கூ​டாது. என்​ஜிஓக்​களின் பதிவு ரத்து செய்யப்பட்டால், வெளி​நாட்டு நன்​கொடைகளால் உருவாக்கப்பட்ட என்​ஜிஓக்​களின் சொத்​துகளை அரசு நிர்​வாகமே கையாளும் என்று மசோ​தா​வில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.
சமீபத்திய புள்​ளி​விவரத்​தின்​படி நாடு முழு​வதும் 22,498 என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. 15,212 என்​ஜிஓக்​களின் பதிவு காலா​வ​தி​யாகி உள்​ளது. சுமார் 14,449 என்​ஜிஓக்​கள் மட்​டுமே செயல்​பாட்​டில் உள்​ளன. எப்​சிஆர்ஏ மசோ​தா​வின் மூலம் உரிம பதிவு ரத்து செய்​யப்​பட்ட என்ஜிஓக்களின் சொத்​துகளை அரசு நிர்​வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்​துக் கொள்​ளும் என்று எதிர்க்​கட்சி தலைவர்கள் குற்​றம்சாட்டி வரு​கின்​றனர்.
இதே காரணத்தை சுட்டிக்காட்டி பல்​வேறு கிறிஸ்​தவ, முஸ்​லிம் மதம் சார்ந்த என்​ஜிஓக்​களும் மசோ​தாவுக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்து வருகின்றன.
வரும் 13-ம் தேதி​யுடன் நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் நிறைவடைகிறது. அதற்​குள்​ளாக எப்​சிஆர்ஏ மசோ​தாவை நிறைவேற்ற மத்​திய அரசு முனைப்பு காட்டி வரு​கிறது. இந்த மசோ​தாவை நிறைவேற்ற மக்​களவை, மாநிலங்​களவை​யில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு போதிய பலம் உள்​ளது. இந்த சூழலில் காங்​கிரஸ் கட்சி தனது எம்​.பி.க்​களுக்கு கொறடா உத்​தரவை பிறப்​பித்​துள்​ளது. அதில், காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் அனை​வரும் ஆகஸ்ட் 10, 11, 12 தேதி​களில் கண்​டிப்​பாக மக்​களவை, மாநிலங்​களவை​யில் ஆஜராக வேண்​டும் என்று உத்​தர​விடப்​பட்டு உள்​ளது.
ஆகஸ்ட் 12-ம் தேதி அல்​லது அதற்கு முன்​பாக எப்​சிஆர்ஏ மசோதாவை நிறைவேற்ற மத்​திய அரசு திட்​ட​மிட்டு இருப்​ப​தாக தகவல்கள் வெளி​யாகி உள்​ளன. நா​டாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் இந்த மசோ​தாவை காங்கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடுமை​யாக எதிர்க்​கும்​ என்​று அரசி​யல்​ நோக்​கர்​கள்​ தெரிவித்துள்​ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட