வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில் புகார்!

வேடநத்தம் மாணவி குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் : மரண தண்டனை பெற்றவர் மீது போலீசில் புகார்!வேடநத்தம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் தரப்பில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வேடநத்தம் மாணவியின் தந்தை சுப்புராஜ், இவ்வழக்கில் தண்டனை பெற்றுள்ள நபர் தரப்பிலிருந்து தங்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் வருவதாகக் குளத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார்!தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த காலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வேடநத்தம் மாணவி வன்கொடுமை மற்றும் கொலை வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்றம், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரன் என்பவருக்கு இரட்டை மரண தண்டனையும், ஒரு வருட கடுங்காவல் தண்டனையும் விதித்து அண்மையில் தீர்ப்பளித்தது.நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, தண்டனை பெற்றுள்ள மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரனின் தாயார், தனது வழக்கறிஞரின் துணையுடன் தூத்துக்குடியில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், நீதிமன்றத் தீர்ப்பையும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் கடுமையாக விமரிசித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.இவ்விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை சுப்புராஜ் குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில், “இவ்வாறு நீதிமன்றத் தீர்ப்பையும், காவல் துறையையும் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலம் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் தேவையற்ற வகையில் அச்சுறுத்தல்களும், நெருக்கடிகளும், மன உளைச்சல் ரீதியான தொந்தரவுகளும் தர்ம முனீஸ்வரன் மற்றும் அவரது தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.எனவே, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள எங்களுடைய குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவின் போது வழக்கறிஞர் தாஸ் உடனிருந்தார். இப்புகார் மனுவின் மீது குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.