அண்மை செய்தி
மெட்ரோவில் முதல்வர் ஆய்வு: பூந்தமல்லியில் போக்குவரத்து நெரிசல்- பொதுமக்கள், மாணவர்கள் அவதி பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

வேலூரில் மரபு காய்கறி, கிழங்கு திருவிழா; விவசாயிகள் ஆர்வம்

தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பின் சார்பில், மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா வேலுார் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விவசாயிகள், பொதுமக்கள் வியக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்திருந்தது. இதில், 500க்கும் அதிகமான மரபு காய்கறி மற்றும் கிழங்கு வகைகளின் கண்காட்சி மற்றும் விதைகள் விற்பனை நடந்தது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சிறப்பு வாய்ந்த காய்கறிகள், கிழங்கு வகைகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கண்காட்சியில், மதனப்பள்ளி, கருஞ்சிவப்பு, லைபீரியா, கருப்பு வால், கருப்பு பிளம், சிகப்பு வால், கொடி பிளம், பச்சை வரி, ஆப்பிள் உள்ளிட்ட 86 வகையான தக்காளி வகைகளும், வெள்ளை நிற கத்தரி, செவந்தம்பட்டி கத்தரி, வெள்ளை தொப்பி கத்தரி, திண்டுக்கல் சல்லி, பச்சை வரி, வெள்ளை முள், காளான், வெள்ளை மடிப்பு, பொள்ளாச்சி வரி உள்ளிட்ட 30 கத்தரிக்காய் வகைகளும் இடம்பெற்று இருந்தது. அதோடு, 60 வகையான மிளகாய் வகைகள், 40 வகையான சுரக்காய் மற்றும் பரங்கிக்காய் வகைகள் இடம்பெற்று இருந்தது. இதேபோன்று, சிகப்பு மக்காச்சோளம், மஞ்சள் மக்காச்சோளம், பலநிற மக்காச்சோளம், கருப்பு மக்காச்சோளம் ஆகியவையும், பன்னீர் பாகற்காய், ருத்திராட்சை பாகற்காய், வெளிர் பச்சை பாகற்காய், குருவி தலை பாகற்காய் என பாகற்காய் வகைகளும் இடம்பெற்று இருந்தது. கிழங்கு வகைகளில் யானை பாதம் கிழங்கு, முள்ளன் கிழங்கு, வாழை வெற்றிலைவள்ளி, சேனை வெற்றிலை வள்ளி, பரணி வெற்றிலைவள்ளி, கூகை கிழங்கு உள்ளிட்ட 90 வகையான கிழங்குகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ‘இப்போது புவிசார் குறியீடு பெற்றுள்ள வேலூர் இலவம்பாடி கத்தரிக்காய் கூட நம்மிடம் விதைகளாக வழங்கப்படுபவை மரபணு மாற்றப்பட்டவை அல்லது ஒட்டுரகங்கள்தான். நாங்கள் அதை அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் தேடித்தேடி மரபு சார்ந்த இலவம்பாடி கத்தரி விதைகளை வாங்கி சேகரித்து உற்பத்தி செய்து தருகிறோம்’ என தெரிவித்தனர். இக்கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட வகைகளில் பாரம்பரிய காய்கறிகள், விதைகள், அவற்றுக்கான செடி, கொடிகள், கிழங்குகள், கீரை வகைகள், நாம் உண்ணத்தகுந்த களைகளாக பாவித்து வீசியெறியும் கீரைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்காட்சியை பார்த்து காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர். காய்கறிகளுடன், விதைகளையும் அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதோடு இயற்கை வேளாண் ஆர்வலர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் பேச்சுக்களை ஆர்வமுடன் கவனித்து பார்வையாளர்கள் குறிப்பு எடுத்துக்கொண்டனர். இந்த அவசர காலத்தில் ஹைபிரிடு காய்கறிகளை உண்டு வாழ்ந்து வரும் மக்களுக்கு, உடலுக்கு நன்மையை மட்டுமே அளிக்கும் மரபு காய்கறிகள், கிழங்குகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது. இதனால், பலரும் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் கிழங்குகளின் விதைகளை வாங்கிச் சென்றனர். அதோடு, விவசாயிகளும் தங்களுக்கு தேவையான விதைகளை பெற்று சென்றனர். இதில் சிறப்பு விருந்தினராக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: விவசாயிகள் சரியான விதைகளை தேர்வு செய்வதன் மூலம் நாட்டு விதைகளை திரும்ப திரும்ப உருவாக்கலாம். ஆனால் மரபணு மாற்றப்பட்ட விதையால் உருவாகும் காய்கறிகளில் இருந்து கிடைக்கும் விதைகள் மீண்டும் முளைக்காது. விளைச்சலும் சரியாக இருக்காது. கோயம்புத்தூர் சிங்காநல்லூர் மத்திய சிறை வளாகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் இருமடி பாத்தி முறையில் விவசாயம் செய்வதுடன் விதைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு இயற்கை உரம், பஞ்சகவ்யம், அமிர்தகலசம், இயற்கை பூச்சி விரட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் கூடுதலாகவும் விளைச்சல் கிடைப்பதுடன், விதைகளும் தாராளமாக கிடைக்கிறது. விதைகளுக்காக எங்கும் தேடி செல்வதில்லை. வேலூர் மாவட்டத்திலும் விவசாயிகளும் இதை முன்மாதிரியாக கொண்டு விவசாயம் செய்தால் நீடித்த நிலையான வளர்ச்சியை பெற முடியும். வேலூர் சிறையிலும் அதை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தேர்வு முறைகேடுக்கு 10 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம்- மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி:எதிர்க்கட்சியினரின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ