சென்னை:
அம்பேத்கர் பிறந்தநாநாள் நாளை கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் பிரமுகர்கள், அம்பேர்கர் இயக்கத்தை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் அவருக்கு மரியாதை செய்வார்கள். இந்த நிலையில் அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
விஜய் ஏற்கனவே அரசியலில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல் பரவியது. அதன் பின்னர் அது பெரிதாக பேசப்படாமல் போனது. ஆனால் அம்பேத்கர் பிறந்தநாளில் விஜய்யின் ரசிகர்களுக்கு அவர் அளித்துள்ள இந்தஉத்தரவு அவரது அரசியல் பிரவேசத்தின் தொடக்கம் என்றே கருதப்படுகிறது.
இந்தநிலையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் இந்த செய்தியை குறுஞ்செய்தி மூலம் அவர் தெரிவித்துள்ளதாகவும், தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருகிற 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளது என்றும் இதன் மூலம் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நேரடி பயணம் மேற்கொள்கிறார் என்றும் பேசப்படுகிறது.
ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





