அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்துடன் நாகை மாவட்ட பணியாளர்கள் இணைப்பு

நாகப்பட்டினம்:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தில் நாகப்பட்டினம் மாவட்ட ரேஷன் கடை பணியாளர்கள் இணையும் விழா சௌ பிரகாஷ் தலைமையில் நடந்தது. சுரேஷ் கண்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழக முதல்வரால் தேர்தல் வாக்குறுதியில் அளித்த தனித்துறை கோரிக்கையை நிறைவேற்றவும், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையிலிருந்து பிரிக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயங்கி வந்த நியாய விலை கடை நாகை பொதுப் பணியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மாற்றப்பட்டது. பணிப்பதிவேடு, வருங்கால வைப்பு நிதி, சம்பள நிலுவைகள் வழங்கப்படாமல் பணியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதனை உடனடியாக கலைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ரேஷன் கடை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட பி.ஓ.எஸ். கருவிகளை பிரிண்டர் உடன் வழங்கவும், எடை குறைவின்றி நியாய விலை கடைகளுக்கு பொருட்களை வழங்கவும், பொங்கல் தொகுப்பில் விநியோகிக்கப்பட்ட இருப்பில் உள்ள சர்க்கரை பச்சரிசியினை ரெகுலர் கணக்கில் வரவு வைக்கவும் வேண்டும். மேலும் ஒரே நாடு ஒரே திட்டத்தின் கீழ் குடிமைப் பொருட்கள் வழங்க கூடிய நிலையில் அனைத்து வகை கார்டுகளுக்கும் அரிசி பிரித்து வழங்காமல் ஒரே தொகுப்பாக வழங்கவும், கட்டுப்பாடற்ற மளிகை பொருட்கள் சிறப்பு அங்காடி வைத்து விற்கவும், ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். கருவிகளில் அரசால் வழங்கப்படும் அரிசி சர்க்கரை பாமாயில் கோதுமை து. பருப்பு ம.எண்ணைய் பொருட்களை மட்டும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவேண்டும்.
மாற்றுப் பொருட்களை விற்க வேண்டும் என்றால் பி.ஓ.எஸ். கருவியில் பதிவேற்றம் செய்து முழுவதும் கணினி மயமாக்கவும், கட்டுப்பாடற்ற மளிகை பொருட்களின் விற்பனையில் வருவாய் துறை சார்பில் விற்கக் கூடாது என்று பதாகைகள் வைப்பதும் கூட்டுறவுத் துறை சார்பில் விற்கச் சொல்லி இலக்கு நிர்ணயம் செய்யும் இரட்டை நிலைப்பாட்டால் பணியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
அரசு ஏழை மக்களுக்கு உணவு அளிக்கின்ற இந்த திட்டத்தில் மளிகை பொருட்களை சில மறைமுக அழுத்தங்களால் வெளி மார்க்கெட்டில் அறிமுகம் இல்லாத வெளிமார்க்கெட் விலையை விட அதிகமாகவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுமதிக்காத பொருட்களையும் பொதுமக்களுக்கு பணியாளர்கள் கட்டாயப்படுத்தி விற்கும் சூழலில் ரேஷன் கடை பணியாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.இதனால் அரசிற்கும் அவப்பெயர் ஏற்படும் நிலை உள்ளது.
ரேஷன் கடைகளில் மளிகை பொருள் விற்பனைக்கு சிறப்பு அங்காடி மூலம் தனியாக வைத்து விற்கவும், மாவட்ட இடம் மாறுதல் கோரிக்கை வைத்த பணியாளர்களுக்கு இடம் மாறுதல் வழங்கி பதவி உயர்வு அளித்து புதிய காலி பணியிடங்களை நிரப்பவும், இக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன், மாநில பொது செயலாளர் பாதினேஷ்குமார், மாநில துணைத்தலைவர் சங்கர் சதாசிவம், மாநில நிர்வாகிகள் அண்ணாதுரை, தங்க பூமி, கனகசபாபதி, மாநில பொருளாளர் நாகராஜ், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல் குமார், பாலதண்டாயுதம், நீலமேகம், செல்லமுத்து, காமராஜ் மற்றும் தமிழகம் முழுவதும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை