அரிக்கொம்பன் யானையை கேரளா அரசு வாங்க மறுத்தால் வன சட்ட படி கொலை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேனியைச் சேர்ந்த கோபால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கல் செய்த மனுவில், “கடந்த 27.04.2023 முதல் கேரளா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த அரிக்கொம்பன் என்ற யானை கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றி வருகிறது. கேரளா உயர்நீதிமன்றம் அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அதன் மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள கேரளா வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரிக்கொம்பன் யானையினால் தமிழ்நாட்டிலுள்ள கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய பொருட்கள் மற்றும் மனிதர்கள் தாக்கப்பட்டு உள்ளனர்.







