ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.1 லட்சம் பணத்தை இழந்த நடிகை நக்மா

தமிழில் பாட்ஷா, காதலன், லவ்பேர்ட்ஸ், சிட்டிசன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நக்மா. தற்போது காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.
மும்பையில் செயல்படும் தனியார் வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்கள் 40 பேருக்கு போலி குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. கே.ஒய்.சி. மற்றும் பேன் கார்டு விவரங்களை புதுப்பிக்க அனுப்பப்பட்ட அந்த இணைப்பை கிளிக் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.இதனை நம்பிய வாடிக்கையாளர்களும் லிங்கை கிளிக் செய்த உடன் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது போல் குறுஞ்செய்திகள் அடுத்தடுத்து வர ஆரம்பித்தன. மூன்று நாட்களுக்குள் லட்சக்கணக்கான ரூபாய் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்கள் குவிந்த நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாணையைத் தீவிரப்படுத்தினர். வங்கிகள் பெயரில் வரும் போலி லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
இந்த ஆன்லைன் மோசடியில் பிரபல நடிகை நக்மா சிக்கி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை இழந்திருக்கும் தகவல் வெளியானது. இதுகுறித்து நக்மா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நக்மாவின் செல்போனுக்கு வங்கியின் கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு ஒரு மெசேஜ் லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கை க்ளிக் செய்தபோது, அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், வங்கியிலிருந்து பேசுவதாகவும், கே.ஒய்.சி விவரங்களை எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
உடனே மோசடிப் பேர்வழி நக்மாவின் போனை அவரது கட்டுப்பாட்டில் எடுத்து, அவரது இன்டர்நெட் பேங்கிங் கணக்கைத் திறந்து அதிலிருந்து 99,998 ரூபாயை வேறு ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டார்.
நக்மாவின் போனுக்கு 20-க்கும் மேற்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டுகள் வந்ததாகவும், அந்த எண்களை தான் பகிரவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அவர்களால் பணத்தை எடுக்கமுடியவில்லை என்றும் நக்மா விளக்கமளித்துள்ளார். குறிப்பிட்ட தனியார் வங்கியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த மோசடி நடந்து வருகிறது. பொதுமக்கள் இந்த விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடம் இருக்க வேண்டும் என்றும், வங்கிகள் ஒருபோதும் ஒன் டைம் பாஸ்வேர்டு கேட்பதில்லை என்றும் போலீஸார் எச்சரித்திருக்கின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத