ஆருத்ரா கோல்டு நிறுவன ம் ரூ.1,000 கோடி மோசடி?

சென்னை:
சென்னை அமைந்தக்கரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ஆருத்ரா. இந்த நிறுவனம் பொதுமக்களுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டித் தருவதாக கூறி ஆசைகாட்டி சுமார் ஆயிரம் கோட்டிக்கு மேல் நிதி திரட்டியது. ஆனால் வட்டியும், முதலும் முறையாக தரவில்லை.
இதனால் வாடிக்கையாளர்கள் பலர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் ஜி.கே.எம் டிரேடிங் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா செந்தாமரை மற்றும் அவரது சகோதரர் முத்து ஆகியோர் நடத்தி வந்தனர்.
இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கு முக்கிய முகவராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர் தமது ஜி.கே.எம். டிரேடிங் மூலம் காஞ்சிபுரம் பகுதியில் பலரிடம் முதலீடு பெற்று ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இதுபோல் சுமார் ரூ.500 கோடி அளவுக்கு இவர் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதலீடு திரட்டியதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சென்னை குற்றப்பிரிவு போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவரிடம் நடத்திய விசாரணையில் சுமார் 200 பேரிடம் இந்த ரூ.500 கோடி முதலீட்டை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் இந்த மோசடி தொடர்பாக சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சந்திர கண்ணன் என்ற முகவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரது வீட்டிலிருந்து 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் பணப் பரிவர்த்தனை உட்பட பல்வேறு விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்நிறுவனத்தில் பலர் தனது மகள் திருமணத்துக்கு வைத்திருந்த பணம், ஓய்வூதியப் பலன்கள் மூலம் கிடைத்த பணம் ஆகும்.
வாழ்நாள் முழுவதும் சேமித்து வீடு வாங்குவதற்கு சேர்த்து வைத்திருந்த பணம் ஆகியவற்றை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. தற்போது முதலீடு செய்த பணமாவது வருமா என்பது தெரியாமல் தவத்து வருகின்றனர். இந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள தொழிலாளர்கள், நடுத்தர மக்களை குறிவைத்து பல்வேறு மோசடி நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்தினர் இதுபோல் பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.
இதில் பல காவல் துறையினரும் தப்பவில்லை. மொத்தமாக காஞ்சிபுரம் பகுதியில் மட்டுமே ஆருத்ரா கோல்டு மட்டுமின்றி பல்வேறு நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து இழந்த தொகை ரூ.1,000 கோடி அளவுக்கு இருக்கும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்