ஆர்.எஸ்.எஸின். (R.S.S.) சூழ்ச்சிக்கு தமிழக அரசு உடன்படக்கூடாது : தமிழர் விடுதலைக் கழகம்

விவேகானந்தர் பாலத்தில் இருந்து ஒரு கண்ணாடி பாதையை திருவள்ளுவர் சிலைக்கு அமைக்க முடிவு செய்து அடிக்கல் நாட்டும் தமிழக அரசின் செயலை கண்டித்தும் தனி பாதையை அமைத்திட வலியுறுத்தியும் தமிழர் விடுதலைக் கழகம் 02.06. 2023 வெள்ளிக்கிழமை  மாலை 4 மணிக்கு அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். நாளை நடைபெற இருக்கும் ஆர்பாட்டத்தில்

கலைஞர் நிறுவிய கன்னியாகுமரி ஐயன் திருவள்ளுவர் சிலையை ஆர் எஸ் எஸிடம் அடகு வைக்காதே…

விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் கண்ணாடிப் பாதை திட்டத்தை உடனே கைவிடு…   

கடற்கரையில் இருந்து தனிப் பாதையை அமைத்திடு… தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…       

வங்காளத்தை பூர்வீகமாகக் கொண்ட விவேகானந்தருக்கு முக்கடல்கள் சங்கமிக்கும் தமிழகத்தின் குமரிமுனையில் நினைவு இல்லத்தை ஆர் எஸ் எஸின் கிளை அமைப்பான விவேகானந்தர் கேந்திரம் எனும் அமைப்பு உருவாக்கி பாதுகாத்து வருகிறது.  அதன் அருகாமையில் உள்ள பாறையில் பெரும் முன் முயற்சிகளுக்கு பின்பு திருவள்ளுவருக்கு சிலை 133 அடியில் தமிழகத்தின் அடையாளமாய் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த சிலைக்கு பாதை தனியே அமைக்கப்படாமல் விவேகானந்தர் இல்லத்திற்குச் சென்று அதன் பிறகு கப்பலின் வழியாக அந்த சிலையை பார்வையிடும் வழியிலேயே அமைக்கப்பட்டது. தொடர்ந்து பூம்புகார் கப்பல் நிருவன கப்பலை இயக்கி வரும்  விவேகானந்தர் கேந்திரம் எனும் அமைப்பு விவேகானந்தர் இல்லம் வரைக்கும் மட்டுமே படகு செயல்படும் அலை அதிகமாக உள்ளது, அல்லது கடல் மேடாக உள்ளது எனக் கூறி தொடர்ச்சியாக திருவள்ளுவர் சிலைக்கு யாரும் சிலையை சென்று பார்வையிட விடாமல் தடுத்து வந்தது. 

இந்த நிலையில் தமிழக அரசு நான்கு நாட்களுக்கு முன் 37 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான கண்ணாடிப்  பாலம் ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளது. இனி வரும் காலத்தில் விவேகானந்தர் கேந்திரம் துணையோடு விவேகானந்தர் இல்லத்திற்கு சென்று விட்டு தான் பிறகு திருவள்ளுவரை  சென்றடைய முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. விவேகானந்தர் கேந்திரம் நினைத்தால் அந்த பாதையை எப்பொழுதும் தடுத்து விடவும் அடைத்து விடவும் முடியும். மேலும் திருவள்ளுவரை சென்று காண, வழிபட  விரும்பும் தமிழ் மக்கள் விவேகானந்தர் இல்லத்தை சென்று பார்த்த பிறகு தான் திருவள்ளுவரை சென்று பார்க்க முடியும் என்ற அவல நிலையும் உள்ளது. 

இந்த ஆர்எஸ்எஸின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு உடன்படக்கூடாது. கடற்கரையிலிருந்து தனிப் பாதையை திருவள்ளுவர் சிலைக்கு அமைக்க வேண்டும். அதற்கு தனி கட்டணம் அரசே வசூலித்தால் கூட பரவாயில்லை. தனி பாதையை அமைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழ் அமைப்புகள், திருக்குறள் பற்றாளர்கள், கோரிக்கை வைத்திருந்தன.             

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விவேகானந்தர் பாலத்தில் இருந்து ஒரு கண்ணாடி பாதையை திருவள்ளுவர் சிலைக்கு அமைக்க முடிவு செய்து அடிக்கல் நாட்டுகிறது தமிழக அரசு.  இந்த செயலை கண்டித்தும் தனி பாதையை அமைத்திட வலியுறுத்தியும் 02.06. 2023 வெள்ளிக்கிழமை  மாலை 4 மணிக்கு அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைக்கும் இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் அமைப்புகளும் பெரியாரிய, அம்பேத்கரிய, பொதுவுடமை அமைப்புகளும், தமிழுணர்வாளர்களும் இணைந்து பங்கேற்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் சாதி,மத, அரசியல் கடந்து பங்கேற்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்திருந்தனர்.    

தமிழர் விடுதலைக் கழகம் : 9841789222 / 9840695674.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

ஆர்.எஸ்.எஸின். (R.S.S.) சூழ்ச்சிக்கு தமிழக அரசு உடன்படக்கூடாது : தமிழர் விடுதலைக் கழகம்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்