ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை:
ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ். இவர் மீது கொலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 18ம் தேதி கும்பல் ஒன்று சுரேசை வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அதிமுக பிரமுகர்களான சுதாகர் மற்றும் ஜான் கென்னடி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நெல்லையிலிருந்து கூலிப்படையை வரவழைத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் 2 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த சி.ஜான்கென்னடி, (ஆயிரம்விளக்கு வடக்கு பகுதிக் கழக மாவட்டப் பிரதிநிதி) பி. சுதாகர் பிரசாத், (111 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர், ஆயிரம்விளக்கு வடக்கு பகுதி) ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.