அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

இஞ்சியில் இவ்வளவு பலன்களா…!

நம் பாரம்பரிய சமையலில் சைவ மற்றும் அசைவ உணவுகளில் சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும்சேர்க்கப்படும் இஞ்சியின் வரலாறு குறித்தும், அதன் வேதியியல் தன்மை குறித்தும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் அற்புதம் குறித்தும் பார்க்கப்போகிறோம்.
பன்னெடுங்காலமாய், இஞ்சி இந்தியா மற்றும் சீனாவில் விளைவிக்கப்பட்டு, சமையலில் முக்கிய பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பழைய மருத்துவ குறிப்புகளைப் பார்த்தால்,இஞ்சி பச்சையாகவும் காயவைத்தும்மருத்துவமுறைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதுஎன அறியப்படுகிறது.
கி.மு 4ஆம் நூற்றாண்டு சீன நாட்டு குறிப்புகளின் படி இஞ்சி வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கும்,சுவாசப் பிரச்சனைகளுக்கும்,வயிற்றுப்போக்கு,காலரா,பல் வலி,ரத்தக்கசிவுபோன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருந்து வந்துள்ளது தெரிகிறது.
சீன மூலிகையாளர்களும் கூட இஞ்சியைஇருமல் மற்றும் சளி தொந்தரவுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். 5 ஆம் நூற்றாண்டில் ஸ்கர்வி எனப்படும் விட்டமின் சி குறைபாட்டினால் உண்டாகும் நோய்க்கு இஞ்சியை மருந்தாக சீனர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்தியாவில் ஆயுர்வேத குறிப்புகளில் இஞ்சி மிக முக்கிய மூலிகைப் பொருளாக முன்னிறுத்தப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளர்கள்இஞ்சியை ஜீரணசக்தியை பெருக்குவதற்காகவும்பசியைத் தூண்டுவதற்காகவும் உடலின் நுண்ணிய பாதைகளை சுத்திகரிப்பதற்காகவும் சக்திவாய்ந்த மருந்தாகவும் பரிந்துரைக்கின்றனர். உடல் தசைகளுக்கு வலுவூட்டக் கூடிய ஊட்டச்சத்துகளை மேம்படுத்துகிறது.மேலும், இஞ்சி ஆயுர்வேதத்தில் மூட்டு வலிகளுக்கும்,சுவாசப் பிரச்சனைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
இத்தகைய அளப்பரிய பயன்பாடுகளால் இஞ்சி ஐயாயிரம் வருடங்களாக சமையலில் மசாலாப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், இக்கால நோய்களுக்கும் இயற்கை மருத்துவ தீர்வாக இஞ்சி உள்ளது.மூட்டு வலி, மூட்டு சவ்வு பிரச்சனைகளுக்கு தீர்வு இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது.
மெடிசினல் ஃபுட் எனும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிப்படி, இஞ்சி செல்லுலர் நிலையில் குறிப்பிட்ட தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.மேலும், பல அறிவியல் ஆய்வின்படி,மூட்டுகளில், குறிப்பாக ருமட்டாய்ட் மூட்டு பிரச்சனைகளின் ஆரம்பநிலைகளில் சிறந்த வலி நிவாரணியாக இஞ்சி செயல்புரிவதை குறிப்பிடுகிறது.
இஞ்சியை தொடர்ந்து எடுத்து வரும் ஆஸ்டியோஆர்திரிட்டிஸ் மூட்டு பிரச்சனையுள்ள பல நோயாளிகளிடம் பரிசோதித்து பார்த்ததில் அவர்களின் வலி வெகுவாக குறைந்து, கால்களின் இயக்கமும் மேம்பாடு அடைந்துள்ளது.ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மூட்டு வலியுள்ள நோயாளிகளுக்கு தசை இறுக்கத்தை சரிசெய்யவும் வலியைக் குறைக்கவும் மசாஜ் தெரப்பியில் இஞ்சி எண்ணெயும் ஆரஞ்சும் உபயோகப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
உடற்பயிற்சியின்போது ஏற்படும் சுளுக்கு, தசைவலி போன்றவற்றை குறைக்க இஞ்சி உதவுகிறது.ஜார்ஜியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 34 மற்றும் 40 தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய இரு குழுக்களுக்கு பச்சையாகவும் வறுத்தும் இஞ்சியை தொடர்ந்து 11 நாட்களுக்கு வழங்கி, அவர்களை கவனித்தனர். ஜேர்னல் ஆஃப் பெய்னில் வெளியான முடிவுகளின்படி, உடற்பயிற்சியால் விளைந்த தசைவலியை 25% அளவிற்கு குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

நன்றி
உங்கள் நலநெறியாளன்..!
ஜே. அன்புரோஸ்.
9360456063

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்