‘இண்டியா’ கூட்டணி அணுகுமுறையால் நிதிஷ் குமார் அதிருப்தி…

பாட்னா:
“நாங்கள் அனைத்துக் கட்சிகளுடனும் பேசி வருகிறோம். ஆனால், காங்கிரஸ் கட்சியோ நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்தான் அதிக கவனம் காட்டி வருகிறது” என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக ‘இண்டியா’ என்ற கூட்டணியைக் கட்டமைத்திருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போதுதான் ‘இண்டியா’ என்ற பெயரும் அந்தக் கூட்டணிக்குச் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் 28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆனால் ‘இண்டியா’ கூட்டணி பலவீனமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், பாட்னாவில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியப் பேரணியில் உரையாற்றிய பிஹார் முதல்வரும், இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவருமான நிதிஷ் குமார், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சவால் விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி தொடர்பாக எந்த வேலையும் இதுவரை நடைபெறவில்லை. நாங்கள் அனைத்துக் கட்சிகளுடனும் பேசி வருகிறோம். நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிப்பவர்களிடமிருந்து நாட்டை ஒன்றிணைத்து பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதற்காக, பாட்னாவிலும் பிற இடங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இண்டியா கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அது தொடர்பான பணிகள் அதிக அளவில் நடைபெறவில்லை என தெரிகிறது. 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் தான் காங்கிரஸ் கட்சி அதிக ஆர்வம் காட்டி வருகிறது. நாங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை முன்னோக்கி இழுத்து செல்வதற்காக ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் இப்போது இதைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. தற்போது ஐந்து மாநில தேர்தல் பணிகளில்தான் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே, ஐந்து மாநில தேர்தல்களுக்குப் பிறகு, அவர்களே அனைவரையும் அழைப்பார்கள்’’ என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத