இந்தியப் பத்திரிகை கவுன்சில் என்பது, நாடாளுமன்றத்தில் ‘பத்திரிகை கவுன்சில் சட்டம், 1978’-ன் மூலம் அமைக்கப்பட்ட சட்டரீதியான, நீதிமுறை சார்புடைய அதிகார அமைப்பாகும். இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும், பத்திரிகைத் துறையின் தரநிலைகளைப் பராமரிப்பதும், மேம்படுத்துவதும் இதன் முக்கியப் பணியாகும்.
இந்தியப் பத்திரிகை கவுன்சிலின் 14-வது அமைப்பு அக்டோபர் 5, 2024 அன்று நிறைவடைந்தது. எனவே, 15வது அமைப்பை அமைக்கும் பொருட்டு, 09.06.2024 தேதியிட்ட விளம்பர அறிவிக்கை வாயிலாக, பத்திரிகை கவுன்சில் சட்டம், 1978-ன் பிரிவுகள் 5(3)(ஏ), (பி) மற்றும் (சி)-ன் கீழ், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தகுதியுள்ள நபர்கள், சங்கங்களை பத்திரிகை கவுன்சில் வரவேற்றுள்ளது. இருப்பினும், பத்திரிகை கவுன்சில் சட்டம், 1978-ன் பிரிவு 5(3)(சி)-ன் கீழ் எவ்வித விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
சட்டபிரிவு 5(4)-ஐயும், அதனுடன் இணைந்த ‘பத்திரிகை கவுன்சில் (நபர்கள் சங்கங்களை அறிவிக்கை செய்வதற்கான நடைமுறை) விதிகள், 2021’-ஐயும் கருத்தில் கொண்டு, கவுன்சிலின் தலைவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள, செய்தி முகமைகளை நிர்வகிக்கும் தகுதியுள்ள நபர்கள் சங்கங்கள் அல்லது செய்தி முகமைகள் ஆகியோரிடமிருந்து, பத்திரிகை கவுன்சில் சட்டம், 1978-ன் பிரிவு 5(3)(சி)-ன் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள், முத்திரையிடப்பட்ட உறையில் இடப்பட்டு, 2026 ஜூன் 19-ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாக, மாலை 5 மணிக்குள் இந்தியப் பத்திரிகை கவுன்சிலின் தலைவரைச் சென்றடைய வேண்டும். இந்த விளம்பர அறிவிக்கை, 17.05.2026 அன்று நாடு முழுவதிலும் உள்ள செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ளது.







