திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 28 ‘கூடா ஒழக்கம்’ (துறவரத்திற்கு ஒவ்வாத தீய ஒழுக்கம் அதாவது மறைவாக சிற்றின்பம் நுகர்தல்)
குறள் 276:“நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்”
பொருள்: உள்ளத்தில் பற்றுகளைத் துறவாமல் துறந்தது போல் நடித்து பிறரை ஏமாற்றி வாழும் பொய்த்துறவிகளைப் போல கொடியவர் எவருமில்லை எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் 2 தீ மோத்தேயு 2: 15ல் “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு .” என்றும், மத்தேயு 10: 38ல் “தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.” என்றும், யாக்கோபு 1:8ல் “இருமனமுள்ளவன் தன் வழிகளிகலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.” என்றும்
திருக்குறளும் திருமறையும் துறவறத்திற்கு ஒவ்வாத கூடா ஒழக்கத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை






