அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

இந்தி எதிர்ப்பு போராட்டம்

மே17 இயக்கத்தின் மூத்தத் தோழர் சிவா திலீபன் எனும் தோழர் சிவக்குமார் பற்ற வைத்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பரவும்.எம் இயக்கத்தின் அச்சமில்லா போராளி, துணிந்து நிற்கும் போராட்ட குணம் படைத்த தோழன் சிவக்குமார். மே17 இயக்கத்தின் தொடக்க காலம்முதலே இயக்கத்தோழனாய் அரும்பணி செய்துவரும் உற்றத் தோழன். தன் குடும்பத்தையே இயக்கத்திற்காகவும், தமிழின போராட்டத்திற்காகவும் வளர்த்தெடுத்த ஒப்பற்ற போராளி.2017ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் மீதான தடையை மீறி சென்ற சமயத்தில் என்னுடன் கைதாகி சிறையில் இருந்தவர். எதற்கும் அஞ்சாத போர்க்குணம் மிக்கவர். அனைவரிடத்திலும் அன்பும், மரியாதையும் செலுத்தும் பண்பானவர். வாய்ப்புள்ள அனைத்து போராட்டங்களிலும் முன்னணியில் இயங்குபவர்.11-மார்ச் நேற்று நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எங்களுடன் பங்கெடுத்திருந்தார். முதல்நபராக இந்தி அழிப்பில் ஈடுபட்டார். உற்சாகமாக தேடித்தேடி இந்தி எழுத்துகளை அழித்தார். இரண்டாம் நடைமேடையில் இருந்த இந்தி பெயர் எழுத்துகளை அழித்துவிட்டு, முன்னகர்ந்தோம். ரயில்வே காவலர்கள் தடுக்க முயன்றதையும் கடந்து தோழர்கள் முழக்கமிட்டு சென்றார்கள். சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள பெரும்பாலான இந்தி எழுத்துக்களை தோழர்களுடன் இணைந்து தோழர் சிவா அழித்தார். முழக்கமிட்டவாறே பயணிகளுக்கு துண்டறிக்கை விநியோகம் செய்தார். மக்களிடம் பேசினார்.கிட்டதட்ட கண்ணில் பட்ட இந்தி எழுத்துகளை அனைத்தையும் அழித்துவிட்ட நிலையில் பேட்டி கொடுத்துவிட்டு வெளியேற முடிவு செய்தோம். அச்சமயத்தில் கடற்கரை செல்லும் ரயில் ஒன்று நிலையத்திற்குள் நுழைந்தது. அனைவரும் நடைமேடையில் ஒதுங்கி நிற்க சொல்லி ஒழுங்குபடுத்தி நகர ஆரம்பித்தோம்.அச்சமயத்தில் உள்ளே வந்துகொண்டிருந்த ரயிலின் முன்னே ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என முழக்கமிட்டவாறே தண்டவாளத்தில் இறங்கி தன்னையே கொடுக்க முனைந்துவிட்டார். அவர் மீது மோதிய ரயிலின் வேகத்தால் கடுமையான தாக்கத்திற்கு ஆளாகினார். யாரும் சற்றும் எதிர்பாராத விதத்தில், நொடிப்பொழுதில் நடந்துவிட்ட இந்த நிகழ்வினால் அனைவரும் நிலைகுலைந்து போனோம்.இந்தி அழிப்பு வெற்றியடைந்து முழக்கங்களுடன் அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்லலாம் எனும் சமயத்தில் இதுபோல நடக்குமென ஒருவரும் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை. எவ்வித முன்னறிவிப்போ, சந்தேகமோ எழாத வண்ணம் அவர் இம்முடிவை எடுத்திருக்கிறார் என அறிய நேர்ந்த பொழுதில் நெஞ்சம் துயரத்தால் வெடிக்கிறது.கடுமையான உடல் காயங்களுடன் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அவருக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அரை மயக்க நிலையிலும், ‘தமிழ், தமிழ்’ என உச்சரித்தவாறே வலியிலும் முணகிக்கொண்டிருந்தார். அவரது நிலையறிந்து மருத்துவர்கள் உடனடியாக சீரமைக்கும் சிகிச்சை மேற்கொண்டனர். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்திற்கு, இன்று அதிகாலை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார் சிவா.அவரது இணையரும், போராட்ட கள தோழருமான கீதாவும், மகள்களும் கடும்துயரத்திலும் மன உறுதியோடு அவர் அருகே நிற்கிறார்கள். “..இயக்கத்திற்காகவும், இனத்திற்காகவும் தன்னை கொடுக்க வந்திருக்கிறார். என் கணவர் என்பதால் மனத்துயரம் இருந்தாலும், அவர் நேசித்த தமிழினத்திற்காக இதை செய்திருக்கிறார் என்பது துயரத்தை தாங்க வலு கொடுக்கிறது. அவர் எதை நேசித்தாரோ அதற்காக வாழ்ந்திருக்கிறார் என்பதில் பெருமை தானே தோழர் ..” என்றார். துயரோடு நிற்கும் சக தோழர்களுக்கு ஆறுதல் கொடுத்து தேற்றுகிறார்.சிவாவின் நேசத்திற்குரிய மகள்,”.. எங்களிடம் எப்பவும் சொல்வார், என் உயிர் போவதென்றால் தமிழ் மக்களுக்காக , தமிழ் மொழிக்காக, ஈழத்திற்காக போகவேண்டும்.. என அடிக்கடி சொல்வார்…” என்றார். தன்னுடைய அரசியலை மட்டுனல்க மனவுறுதியை தன்னுடைய மனைவிக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டியிருக்கிறார் தோழர் சிவா.தமிழர்களுக்காக, தமிழுக்காக நாம் வாழ்முழுதும் போராடலாம், ஆனால் வாழ்க்கையை இழந்து போராடும் சூழல் ஒருபோதும் இருக்கக்கூடாது.”… தமிழின போராட்டம் என்பது உயிர்கொடைக்கானதல்ல, விடுதலை வேட்கைக்கானது, எதிரிகள் அழியாமல், நாம் அழியக்கூடாது தோழர் ..” என உணர்வு பொங்க சிவா எங்களிடம் சொல்வார். ஆனால் அவரே இப்படியான முடிவெடுத்தது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.உயிர்கொடை முடிவுகளை மே17 ஆதரித்ததில்லை. கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டக்குணத்தையே முன்னிலைப்படுத்தி இருக்கிறோம். “போராடுவதே அரசியல் பணி” என்பதை நன்கு அறிந்த தோழர் சிவா விரைந்து நலம்பெறுவார் என நம்புகிறோம். தமிழுக்காக தன்னையே கொடுக்க வந்த தோழர் சிவாவிற்காக உங்கள் ஆதரவு திரளட்டும். உயிருக்கு போராடும் சமயத்தில் கூட ‘தமிழ், தமிழ்’ என முழங்கும் தோழனுக்காக நீங்களும் திரள்வீர்கள் எனும் நம்பிக்கை எமக்குண்டு.தோழர் சிவா திலீபன் பற்ற வைத்த பெருந்தீ இந்தியை எரிக்கட்டும். தமிழ் வெல்லட்டும்.மே பதினேழு இயக்கம்மே17 இயக்கத்தின் மூத்தத் தோழர் சிவா திலீபன் எனும் தோழர் சிவக்குமார் பற்ற வைத்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பரவும்.எம் இயக்கத்தின் அச்சமில்லா போராளி, துணிந்து நிற்கும் போராட்ட குணம் படைத்த தோழன் சிவக்குமார். மே17 இயக்கத்தின் தொடக்க காலம்முதலே இயக்கத்தோழனாய் அரும்பணி செய்துவரும் உற்றத் தோழன். தன் குடும்பத்தையே இயக்கத்திற்காகவும், தமிழின போராட்டத்திற்காகவும் வளர்த்தெடுத்த ஒப்பற்ற போராளி.2017ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் மீதான தடையை மீறி சென்ற சமயத்தில் என்னுடன் கைதாகி சிறையில் இருந்தவர். எதற்கும் அஞ்சாத போர்க்குணம் மிக்கவர். அனைவரிடத்திலும் அன்பும், மரியாதையும் செலுத்தும் பண்பானவர். வாய்ப்புள்ள அனைத்து போராட்டங்களிலும் முன்னணியில் இயங்குபவர்.11-மார்ச் நேற்று நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எங்களுடன் பங்கெடுத்திருந்தார். முதல்நபராக இந்தி அழிப்பில் ஈடுபட்டார். உற்சாகமாக தேடித்தேடி இந்தி எழுத்துகளை அழித்தார். இரண்டாம் நடைமேடையில் இருந்த இந்தி பெயர் எழுத்துகளை அழித்துவிட்டு, முன்னகர்ந்தோம். ரயில்வே காவலர்கள் தடுக்க முயன்றதையும் கடந்து தோழர்கள் முழக்கமிட்டு சென்றார்கள். சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள பெரும்பாலான இந்தி எழுத்துக்களை தோழர்களுடன் இணைந்து தோழர் சிவா அழித்தார். முழக்கமிட்டவாறே பயணிகளுக்கு துண்டறிக்கை விநியோகம் செய்தார். மக்களிடம் பேசினார்.கிட்டதட்ட கண்ணில் பட்ட இந்தி எழுத்துகளை அனைத்தையும் அழித்துவிட்ட நிலையில் பேட்டி கொடுத்துவிட்டு வெளியேற முடிவு செய்தோம். அச்சமயத்தில் கடற்கரை செல்லும் ரயில் ஒன்று நிலையத்திற்குள் நுழைந்தது. அனைவரும் நடைமேடையில் ஒதுங்கி நிற்க சொல்லி ஒழுங்குபடுத்தி நகர ஆரம்பித்தோம்.அச்சமயத்தில் உள்ளே வந்துகொண்டிருந்த ரயிலின் முன்னே ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என முழக்கமிட்டவாறே தண்டவாளத்தில் இறங்கி தன்னையே கொடுக்க முனைந்துவிட்டார். அவர் மீது மோதிய ரயிலின் வேகத்தால் கடுமையான தாக்கத்திற்கு ஆளாகினார். யாரும் சற்றும் எதிர்பாராத விதத்தில், நொடிப்பொழுதில் நடந்துவிட்ட இந்த நிகழ்வினால் அனைவரும் நிலைகுலைந்து போனோம்.இந்தி அழிப்பு வெற்றியடைந்து முழக்கங்களுடன் அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்லலாம் எனும் சமயத்தில் இதுபோல நடக்குமென ஒருவரும் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை. எவ்வித முன்னறிவிப்போ, சந்தேகமோ எழாத வண்ணம் அவர் இம்முடிவை எடுத்திருக்கிறார் என அறிய நேர்ந்த பொழுதில் நெஞ்சம் துயரத்தால் வெடிக்கிறது.கடுமையான உடல் காயங்களுடன் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அவருக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அரை மயக்க நிலையிலும், ‘தமிழ், தமிழ்’ என உச்சரித்தவாறே வலியிலும் முணகிக்கொண்டிருந்தார். அவரது நிலையறிந்து மருத்துவர்கள் உடனடியாக சீரமைக்கும் சிகிச்சை மேற்கொண்டனர். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்திற்கு, இன்று அதிகாலை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார் சிவா.அவரது இணையரும், போராட்ட கள தோழருமான கீதாவும், மகள்களும் கடும்துயரத்திலும் மன உறுதியோடு அவர் அருகே நிற்கிறார்கள். “..இயக்கத்திற்காகவும், இனத்திற்காகவும் தன்னை கொடுக்க வந்திருக்கிறார். என் கணவர் என்பதால் மனத்துயரம் இருந்தாலும், அவர் நேசித்த தமிழினத்திற்காக இதை செய்திருக்கிறார் என்பது துயரத்தை தாங்க வலு கொடுக்கிறது. அவர் எதை நேசித்தாரோ அதற்காக வாழ்ந்திருக்கிறார் என்பதில் பெருமை தானே தோழர் ..” என்றார். துயரோடு நிற்கும் சக தோழர்களுக்கு ஆறுதல் கொடுத்து தேற்றுகிறார்.சிவாவின் நேசத்திற்குரிய மகள்,”.. எங்களிடம் எப்பவும் சொல்வார், என் உயிர் போவதென்றால் தமிழ் மக்களுக்காக , தமிழ் மொழிக்காக, ஈழத்திற்காக போகவேண்டும்.. என அடிக்கடி சொல்வார்…” என்றார். தன்னுடைய அரசியலை மட்டுனல்க மனவுறுதியை தன்னுடைய மனைவிக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டியிருக்கிறார் தோழர் சிவா.தமிழர்களுக்காக, தமிழுக்காக நாம் வாழ்முழுதும் போராடலாம், ஆனால் வாழ்க்கையை இழந்து போராடும் சூழல் ஒருபோதும் இருக்கக்கூடாது.”… தமிழின போராட்டம் என்பது உயிர்கொடைக்கானதல்ல, விடுதலை வேட்கைக்கானது, எதிரிகள் அழியாமல், நாம் அழியக்கூடாது தோழர் ..” என உணர்வு பொங்க சிவா எங்களிடம் சொல்வார். ஆனால் அவரே இப்படியான முடிவெடுத்தது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.உயிர்கொடை முடிவுகளை மே17 ஆதரித்ததில்லை. கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டக்குணத்தையே முன்னிலைப்படுத்தி இருக்கிறோம். “போராடுவதே அரசியல் பணி” என்பதை நன்கு அறிந்த தோழர் சிவா விரைந்து நலம்பெறுவார் என நம்புகிறோம். தமிழுக்காக தன்னையே கொடுக்க வந்த தோழர் சிவாவிற்காக உங்கள் ஆதரவு திரளட்டும். உயிருக்கு போராடும் சமயத்தில் கூட ‘தமிழ், தமிழ்’ என முழங்கும் தோழனுக்காக நீங்களும் திரள்வீர்கள் எனும் நம்பிக்கை எமக்குண்டு.தோழர் சிவா திலீபன் பற்ற வைத்த பெருந்தீ இந்தியை எரிக்கட்டும். தமிழ் வெல்லட்டும்.

மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

இந்தி எதிர்ப்பு போராட்டம்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்