இயக்குநர் அமீரிடம் விசாரணை : போதை பொருள் தடுப்பு துறை…

தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் நண்பரான இயக்குனர் அமீர், போதை பொருள் தடுப்பு துறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் டெல்லியில் பிடிப்பட்டது. இந்த  கடத்தல் வழக்கு தொடர்பாக  தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கடத்தலின் முக்கிய புள்ளியான திமுக அயலக அணியின் துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் என்பவர் இருப்பது தெரிய வந்தது. அவர் தலைமறைவான நிலையில், சில நாட்களில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், போதை பொருட்கள் தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு, உணவு பொருட்களுடன் சேர்த்து அனுப்பி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை  போதை பொருள் தடுப்பு துறையினர்  சிறையில் அடைதுள்ளனர். இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்தசிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜாபர் சாதிக்கின் தம்பி உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும், போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்தவர்களை போதைப்பொருள் தடுப்பு துறை விசாரித்து வருகிறது.  ஜாபர் சாதிக், இயக்குனர் அமிரை வைத்து படம் தயாரித்து உள்ளதுடன்,  அமிருக்கு உணவகம் உள்பட பல்வேறு உதவிகளை செய்து  வந்துள்ளார்.  மேலும், அவர் தயாரித்த  படத்தை, அமைச்சர் உயதநிதியின் மனைவி கிருத்திகாவை வைத்து புரோமோட் செய்ததும் தெரிய வந்தது.  மேலும், ஜாபர் ஆளும் தரப்புக்கு நெருக்கமாக இருந்து தனது கடத்தல் பணிகளை திறமையாக கையாண்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, இயக்குனர் அமீர் உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு துறை விசாரணைக்கு அழைத்தது. அதனப்டி,  இயக்குனர் அமீர் நேற்று (ஏப்ரல் 2ந்தேதி)  காலை டெல்லியில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆஜர் ஆனார். காலை 9 மணி அளவில் வந்த அவரிடம் பகல் 12 மணி அளவில் விசாரணை தொடங்கப்பட்டது. பின்னர் உணவு இடைவெளைக்கு பின்னர், அதிகாரிகளின் விசாரணை நள்ளிரவு வரை தொடர்ந்தது. சுமார்  11 மணி நேரம் என்.சி.பி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது, ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் உடனான தொடர்பு எப்படி ஏற்பட்டது என அமீரிடம் என்.சி.பி. அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இயக்குனர் அமீரின் செல்போனை முழுவதுமாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இயக்குனர் அமீர் அளித்த வாக்குமூலத்தை முழுவதுமாக வீடியோ பதிவு செய்த அதிகாரிகள், அமீர் அளித்த வாக்குமூலத்தையும், ஜாபர் சாதிக் அளிக்க வாக்குமூலத்தையும் முழுவதுமாக ஒப்பிட்டு பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து விசாரணையில் இருந்து வெளியேறிய அவரிடம்,  தேவைப்படும் பட்சத்தில் மறு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்.சி.பி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், இன்னும் இரண்டு மூன்று நாட்களில்  சந்திக்கிறேன் என  தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.