உத்தரகாண்ட் சிறையில் பெண் உள்பட 45 கைதிகளுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு

உத்தரகாண்ட்:
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி சிறையில் 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஹல்த்வானி சிறையில் உள்ள பெண் கைதி ஒருவருக்கும் எய்ட்ஸ் நோய் உறுதிசெய்யப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, சுசீலா திவாரி மருத்துவமனையின் ஏஆர்டி சென்டர் இன்சார்ஜ் டாக்டர் பரம்ஜித் சிங் தெரிவிக்கையில், ஹல்த்வானி சிறையில் 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர். சிறையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிறையில் உள்ள நிர்வாகத்திற்கும், கைதிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட எச்.ஐ.வி நோயாளிகளுக்காக ஏஆர்டி மையம் அமைக்கப்பட்டு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
மருத்துவனையில் இருந்து ஒரு குழு மாதம் இரண்டு முறை சிறைக்கு சென்று கைதிகளிடம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். லேசான பாதிப்பு உள்ள அனைத்து கைதிகளும் சிறைக்குள்ளே மருந்து வழங்கப்பட்டு வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கைதிகளை மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை அளித்து வருகிறோம்.
எச்.ஐ.வி. பாதித்த கைதிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகம் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கிறது. அதிக எண்ணிக்கையிலான கைதிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, எச்ஐவி பாதித்த கைதிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகம் எச்.ஐ.வி நோயாளிகளுக்காக ஏஆர்டி மையம் அமைத்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்