உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை டெஸ்ட் போட்டி: பார்வையிடும் இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள்

அகமதாபாத்:
அகமதாபாத்தில் நாளை தொடங்கும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்தியா – ஆஸ்திரேலியா பிரதமர்கள் பார்க்கின்றனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இதில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது.
முதல் நாள் ஆட்டத்தை காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியுடன் நடந்த 3வது டெஸ்டில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலுக்கும் முன்னேறி அசத்தியது. இதே போல, 4ம் டெஸ்ட் போட்டியில், வென்றால் இந்திய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறலாம்.
இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் நேரில் பார்க்க உள்ளனர். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று இந்தியா வருகிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை