பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:
ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்ட அறிவிப்பில்,
நமது அரசால், பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு, இதுவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு. அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும். நமது அரசு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தினை முதன்மை நோக்கமாகக் கொண்டு வெற்றித் தொலைநோக்குத் திட்ட ஆவணத்தினை (க்ஷிமீtக்ஷீவீ க்ஷிவீsவீஷீஸீ ஞிஷீநீuனீமீஸீt) வெளியிட்டுள்ளது. அந்தத் திட்ட ஆவணத்தின் அடிப்படையில், இலக்கு நிர்ணயம் செய்து பல்வேறு திட்டங்கள். அடுத்து வருகின்ற முதலாம். மூன்றாம் மற்றும் ஐந்தாம் ஆண்டிற்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பினமாக, பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து இவ்வரசு நிறைவேற்றும்.
கடந்த நான்கு மாதங்களாக வளைகுடாப் பகுதியில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி வருவதாலும், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும் பொதுமக்கள் தங்களது வருவாயிலிருந்து கூடுதலான தொகையினைச் செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டு நிதிநெருக்கடியான சூழலிலும் பொதுமக்களின் நிதிச்சுமையினைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலும், எரிவாயு சிலிண்டருக்காகச் செலவழிக்கப்பட்டுவரும் தொகையினை அவர்களுக்கு வழங்க இவ்வரசு முடிவு செய்துள்ளது.
வகையில், எனவே குடும்பத் தலைவிகள் பயன்பெறும் முதற்கட்டமாக “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டப் பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து, சிலிண்டர் பெற்றவுடன் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பட்டியல் பெற்று, சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 இலட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர். சிறு, குறு விவசாய குடும்பத்தினர். மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் இத்திட்டத்தினைச் பயனடைவார்கள். செயல்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், வரும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் தோராயமாக 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு