எம்.ஆர்.டி.எஸ். பாலத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் அழகுபடுத்தும் பணிகளை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, நமக்கு நாமே உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் புதிய பூங்காக்கள் அமைத்தல், அழகுபடுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.  

இந்நிலையில், அடையாறு மண்டலம், வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் முதல் புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். இரயில் நிலையம் வரை பாலங்களின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93 இலட்சம் மதிப்பில் செயற்கை நீரூற்று, பசுமை புல்வெளி, செடிகள், நடைபாதை அமைத்தல், மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல், வண்ண ஓவியங்கள்  மற்றும் அழகுபடுத்தும் பணிகள், ஆலந்தூர் மண்டலத்தில் ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ். இரயில் நிலையம் முதல் தில்லை கங்கா நகர் வரை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அழகுபடுத்தும் பணிகள், இதே சாலையில் பெருங்குடி மண்டலத்தில் புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். இரயில் நிலையம் முதல் ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் வரை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட  பசுமையாக்கும் பணிகள், நீரூற்று, நடைபாதை உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.03.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு) அவர்கள், அடையாறு மண்டலக்குழுத் தலைவர் திரு.ஆர்.துரைராஜ் அவர்கள், தலைமைப் பொறியாளர் (பொது) திரு.எஸ்.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள்,  மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு அரசு நீட்டித்துள்ளது

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஜூலை 31-க்கு

ராஜினாமா செய்தவர்களின் விளக்க கடிதங்களின் நகலை எங்களுக்கு வழங்க வேண்டும்” -அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை

🔹🔸“ராஜினாமா செய்தவர்களின் விளக்க கடிதங்களின் நகலை எங்களுக்கு வழங்க வேண்டும்” -அக்ரி கிருஷ்ணமூர்த்தி

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள்