ஏற்றத்தாழ்வுகள் ஏன்?… நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத திரையரங்கம்… தமிழக அரசின் நடவடிக்கை பாயுமா?

சென்னை:
சென்னையில் நடிகர் சிம்புவின் படத்தை பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு டிக்கெட் கொடுத்தும் படம் பார்க்க அனுமதிக்காத அவலம் நடைபெற்றுள்ளது. இதை பார்க்கும் போது ஜாதி இன்னும் ஒழியவில்லை என்கிற நிலைப்பாடு நீடிப்பதாகவே தெரிகிறது.
சென்னை கோயம்பேடு – மதுரவாயல் சாலையில் அமைந்துள்ளது ரோகிணி திரையரங்கம். இங்கு நடிகர் சிம்பு நடிப்பில் பத்து தல படம் நேற்று வெளியானது. இந்த படத்தை பார்ப்பதற்காக நரிக்குறவர்கள் சிலர் இந்த திரையரங்கத்திற்கு வந்தனர். இவர்களுக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்கியது. படத்தை பார்க்கலாம் என்கிற ஆனந்தத்துடன் திரையரங்கத்தை நோக்கி நடையிட்ட அவர்களுக்கு டிக்கெட் பரிசோதகரால் பேரிடி காத்திருந்தது.
ஆம்.. டிக்கெட்டை பரிசோதனை கூட செய்யாமல், உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. வெளியே செல்லுங்கள் என்று நாயை விரட்டுவதுபோல் விரட்டினார். நாங்கள் டிக்கெட் வாங்கிவிட்டோம். பிறகும் ஏன் எங்களை திரையரங்கத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு டிக்கெட் பரிசோதகர் உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்டார்.
இந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், நரிக்குறவர்களிடம், “நீங்கள் தான் டிக்கெட் வாங்கி வீட்டீர்கள் அல்லவா… டிக்கெட்டை காண்பித்துவிட்டு உள்ளே செல்லுங்கள்.. உங்களை எதற்காக தடுக்கிறார்கள்” என்று நரிக்குறவர்களுக்கு ஆதரவாக பேசினார். ஆனாலும் அந்த டிக்கெட் பரிசோதகர் மனம் மாறாமல் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்.
இதனால் டிக்கெட் வாங்கியும் படம் பார்க்க முடியவில்லையே என்கிற சோகத்துடன் அந்த நரிக்குறவர்கள் வேதனை முகத்துடன் திரையரங்க நுழைவு வாயிலில் டிக்கெட்டை கையில் ஏந்தியபடியே காத்திருந்தனர். ஆனாலும் பயனளிக்கவில்லை. இந்த நிகழ்வு சமூக வளைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இதற்கு பலர் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
ஜாதி, மத பேதம் என்பது அக்காலத்தில் தலை தூக்கி ஆடியது. தற்போதைய விஞ்ஞான உலகில் திறமைகளுக்குதான் மதிப்பு அதிகம் உள்ளது. ஆனால் இன்றும் நமது நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்பதை இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு படம்போட்டு காட்டுகின்றன. பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காகதான் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே யூனிபார்ம் வழங்கப்படுகிறது. இந்த ஜாதி, அந்த ஜாதி, இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பேதம் பார்த்து பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் இடங்களில் தனித்தனியாக இருக்கை ஒன்றும் ஒதுக்கப்படுவது கிடையாது.
ஜாதி, மத பேதம், ஏழை, பணக்காரன் என்கிற பேதம் இன்றி முதலில் அனைவரும் ஒன்று கூடியதே திரையரங்குகள் தான். இங்கும் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகளை காணும்போது இது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது.

முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

இதுபோன்ற சம்பவங்கள்தான் ஜாதி, மத பேதங்களுக்கு முதல் ஆரம்பம் என்பதை கருத்தில் கொண்டு ஜாதி மத பேதங்கள் பார்க்காமல் திராவிட மாடல் ஆட்சி என்று தனது ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், சமூதாக ஒழுக்க கேடாக கருதி இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நடிகர் சிம்பு, இயக்குனர் பார்வைக்கு…

நரிக்குறவர்கள் அதிக அளவில் கூடி பார்க்கும் படம் நடிகர் எம்.ஜி.ஆரின் படம் தான். அதேபோல் நரிக்குறவர்கள், நடிகர் சிம்புவின் படத்திற்கு இவ்வளவு ஆர்வமாக வந்திருக்கிறார்கள். இதனை நன்மையாக கருதி நடிகர் சிம்புவும், இயக்குனரும் தங்கள் மேலான அறிக்கையை வெளியிட்டு பேதங்களை போக்க திரையரங்க நிர்வாகத்துடன் கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

ஏற்றத்தாழ்வுகள் ஏன்?… நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத திரையரங்கம்… தமிழக அரசின் நடவடிக்கை பாயுமா?

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400