ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி?மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்துக் களமிறங்குகிறார் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி. முதல் முறையாக தேர்தலில் களம் காணும் சுந்தர் சி, தனது சக சமூகத்தைச் சேர்ந்தவரான பிடிஆரை எதிர்த்து களம் இறக்கப்பட்டுள்ளார்.வரும் சட்டசபை தேர்தலில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஏசி சண்முகம் கொடுத்த அறிவிப்பில், அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் தங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும், அதிமுக ஒதுக்கிய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், பாஜக ஒதுக்கும் தொகுதியில் தாமரை சின்னத்திலும் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.மதுரை மத்தியில் சுந்தர்.சி
அதன்படி, மதுரை மத்திய தொகுதியை அதிமுக, புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஏசி சண்முகம். இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சுந்தர் சி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். பாஜகவில் நடிகை குஷ்பு பொறுப்பு வகித்து வரும் நிலையில், அவரது கணவரான சுந்தர் சி இந்த சட்டசபை தேர்தலில் களமிறங்குகிறார்.மதுரை மத்திய தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவும், அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். கொண்டைக்கட்டி தொண்டைமண்டல வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த அவர், மதுரை மத்திய தொகுதியில் பாரம்பரியமான செல்வாக்கைக் கொண்டவர். 2 முறை அங்கு வெற்றி பெற்றுள்ளார். அவரது தந்தை பிடிஆர் பழனிவேல்ராஜனும் அங்கு வெற்றி பெற்று செல்வாக்காக இருந்தவர்.ஒரே சமூகம் திமுகவின் அறிவு முகமாக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மதுரை மத்திய தொகுதியில் வீழ்த்துவது சாதாரண காரியமல்ல என்பதை உணர்ந்த ஏ.சி. சண்முகம், அவர் சார்ந்த அதே பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சினிமா பிரபலம் சுந்தர் சி-யை களமிறக்கி உள்ளார். மதுரை மத்தியில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்களின் வாக்குகள் முழுமையாக பிடிஆர் பக்கம் செல்ல விடாமல் தடுக்கவும் சுந்தர் சி களமிறக்கப்பட்டுள்ளார்.மேலும், திமுகவின் ஸ்ட்ராங் வேட்பாளர்களை எதிர்க்க, பிரபலங்களை களமிறக்குவது ஒரு உத்தி. அந்தவகையில், இந்த முறை மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்க்க சுந்தர் சி களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.சுந்தர்.சி வேட்பாளர் ஆனது எப்படி?
கடந்த மாதம் மதுரை வண்டியூரில், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின், ஏ.சி.எஸ் அறக்கட்டளை சார்பில் 140 அடி உயர சுதந்திரப் போராட்ட வீரர், வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. இதில் இயக்குநர் சுந்தர்.சி கலந்து கொண்டார்.அந்த நிகழ்வில் சுந்தர் சி பேசும்போது, “சுந்தர்.சி என்பது என்னுடைய பெயர். இதில் இருக்கும் சி என்பது என்னுடைய அப்பாவின் பெயரான சிதம்பரம் பிள்ளை என்பதை குறிக்கும்” என பேசியிருந்தார். மேலும் ஏ.சி.சண்முகமும் தானும் நண்பர்களாக இருப்பதாகவும் சுந்தர்.சி மேடையில் பேசியிருந்தார். இந்தச் சூழலில் தான் சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.

CCRT and NIT Puducherry Jointly Inaugurate Five-Day Workshop on “Theatre in Education”
The Centre for Cultural Resources and Training (CCRT), New Delhi,






