ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை: உகாண்டா பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கம்பாலா:
ஆணுக்கு பெண் என்பது தான் இயற்கையின் நியதி. இதுவே மனிதர்கள் கடைப்பிடித்து வரும் வழிமுறை. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் கலாசாரம் மாறி வருகிறது. ஆணுடன் ஆண் குடும்பம் நடத்துவதும், பெண்ணுடன் பெண் குடும்பம் நடத்துவதும், ஆணாக மாறிய பெண், பெண்ணாக மாறிய ஆண் சேர்ந்து குடும்பம் நடத்துவதும் என்று பல்வேறு புதுப்புது மாற்றங்கள் உலக அளவில் நிகழ்ந்து வருகிறது. இது நமது கலாசாரத்தை சீரழிப்பதாகும்.
இவற்றிற்கு அங்கீ£ரம் அளிக்க வேண்டும். சட்டம் இயற்ற வேண்டும் என்று இவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். சில நாடுகள் இதற்கு அங்கீகாரம் அளித்தும் உள்ளது. சில நாடுகள் இன்னும் அங்கீ£ரம் அளிக்கவில்லை.
இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். ஏற்கனவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகிய வற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அவர் கூறும்போது, இந்த மசோதா நமது தேவாலய கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் நமது பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், பன்முக கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு விரிவான மற்றும் மேம்பட்ட சட்டத்தை நிறுவுவதாகும் என்றார்.
இந்த மசோதா பாராளுமன்றததில் 389 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதா, ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கிடையே ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இது வெறுக்கத்தக்க சட்டம் என்று தெரிவித்தனர். மனித உரிமை ஆர்வலர் சாரா கசண்டே கூறும்போது, “உகாண்டாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள். வெறுப்பை ஊக்குவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முயல்கிறது” என்றார்.
ஓரினச் சேர்க்கை ஆர்வலர் எரிக் நடாவுலா கூறும் போது, “பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல். எங்கள் எம்.பி.க்களின் தீர்ப்பு வெறுப்பு மற்றும் ஓரினச் சேர்க்கையால் மழுங்கடிக்கப்பட்டது பயமாக இருக்கிறது. இந்தக் கொடூர சட்டத்தால் யாருக்கு லாபம்?” இந்த மசோதா சட்டமாக கையொப்பமிடப்பட்டால், “கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை, சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டான உரிமைகள் உள்பட பல அடிப்படை உரிமைகளை மீறும்“ என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.