அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்நாடகாவை கைப்பற்றியகாங்கிரஸ் – பாஜகவுக்கு பெரும் பின்னடைவு; மஜத அதிர்ச்சி தோல்வி

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 65, மஜத 19 இடங்களை மட்டுமே பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் கடந்த 10-ம் தேதி நடந்தது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. பாஜக 224, காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாயசங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133, சுயேச்சைகள் 918 உட்பட 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொட‌ங்கியது. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கி இருந்தது. பாஜகவும், மஜதவும் பின்னடைவை சந்தித்தன. பெங்களூரு மாந‌கரம், கடலோர கர்நாடக மாவட்டங்களில் பாஜக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்தது. தனிப் பெரும்பான்மைக்கு தேவையான‌ 113 தொகுதிகளை காங்கிரஸ் எளிதாக கடந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் முன்னால் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

நிறைவாக, காங்கிரஸ் 136 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. பாஜக 65 தொகுதிகளிலும், மஜத 19 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றன. பாஜகவில் இருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பித்த ஜனார்த்தன ரெட்டி கங்காவதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸ், பாஜகவில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்ட 3 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக தோல்வியை தொடர்ந்து, முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. இருவரும் கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளனர். புதிய முதல்வ‌ரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று பெங்களூருவில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள், வெற்றிபெற்ற எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.

கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை