காவல் துறையில் நடப்பாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் விஜய்

சென்னை,
சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி 2026-&27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆகஸ்டு 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.
இந்த நிலையில், ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.
காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடந்தது. முன்னதாக, துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும். போதைப் பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும். ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீன மயமாக்கப்படும்.
நடப்பாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும். காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு எதிர்பாரா செலவீனம் உயர்த்தப்படும். வண்டலூரில் உள்ள காவலர் உயர்பயிற்சியத்தில் உள் விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட

ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய