கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் – கர்நாடகாவில் மக்கள் பீதி…

பெங்களூரு: கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பெங்களூருக்கு அருகில் உள்ள சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் தலகயலாபெட்டா கிராமத்தில் கொசுக்களில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருக்கக்கூடிய 68 இடங்களில் கொசுக்களின் உடலில் ஜிகா வைரஸ் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டதாகவும், மொத்தம் 100 மாதிரிகள் பெறப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மாதிரிகளில் ஆறு சிக்கபல்லாபுராவில் உள்ள ஆறு இடங்களில் இருந்து பெறப்பட்டவை.
இவற்றை ஆய்வு செய்ததில் ஐந்து மாதிரிகள் நெகட்டிவ் என்றும் ஒரு மாதிரி பாசிட்டிவ் என்றும் வந்துள்ளது. மாதிரிகள் பெறப்பட்ட அனைத்து இடங்களுக்கும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்தும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளால் ஏற்கனவே சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெங்கடாபுரா, திப்புரஹள்ளி, பச்சனஹள்ளி, வட்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தனர். இப்பகுதியில் சுமார் 5,000 பேரின் உடல்நிலை குறித்து சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று ஆகும். காய்ச்சல், சொறி, தலைவலி, மூட்டு வலி, சிவப்பு கண்கள் மற்றும் தசைவலி ஆகியவை தான் இதன் அறிகுறி. ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க கர்நாடக சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய