கோயில் நிலத்தை அபகரித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ க்கள் – அதிகாரிகளை கைது செய்க கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம் !

புதுச்சேரி – பாரதி வீதியிலுள்ள பழம்பெருமை வாய்ந்த காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி பத்திரங்கள் வழியே அபகரித்த வில்லியனூர் சார் பதிவாளர் உட்பட 13 பேர் இதுவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அரசு அதிகாரிகளுக்கு ஆணையிட்ட மேல் அதிகாரிகளோ, இதற்குப் பின்னணியாகச் செயல்பட்ட அரசியல்வாதிகளோ இதுவரை கைது செய்யப்படவில்லை!

குறிப்பாக, மாவட்டப் பத்திரப் பதிவாளர் இரமேஷ், வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்ட அரசு அதிகாரிகளைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். அதேபோல், கோயில் நிலத்தை தனது குடும்பத்தினரின் பெயரில் அபகரித்துக் கொண்டுள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் ஆகியோரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் ரிச்சர்ட்ஸ் ஜான்குமாரின் குடும்பத்தினர் பெயரில் கோயில் நிலம் வாங்கப்பட்டது குறித்த ஆவணங்களை வெளியிட்டும், இன்று செவ்வாய் (04.07.2023) காலை 11 மணியளவில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தெய்வத் தமிழ்ப் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் சிவ. மு. இராசாராம் தலைமை தாங்கினார். தே. சத்தியமூர்த்தி (தெய்வத் தமிழ்ப் பேரவை), அசோக்ராசு (புதுச்சேரி தெற்கு, செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்), முருகன் (தொரவி செயலாளர், த.தே.பே.), குமார் (ஐவேலி கிளைச் செயலாளர், த.தே.பே.) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளரும், தெய்வத் தமிழ்ப் பேரவை – செயற்குழு உறுப்பினருமான க. அருணபாரதி கண்டன உரையாற்றி, கோயில் நில விற்பனை தொடர்பான ஆவணங்களை வெளியிட்டார்.

நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி பொருளாளர் இளங்கோவன், புதுவை மாநில விஸ்வகர்ம மகாஜன சங்கம் தலைவர், பா. சண்முகம், (புதுச்சேரி தலைவர், தமிழர் களம்) கோ. அழகர் , ச. மூர்த்தி (தலைவர், விஸ்வகர்ம முன்னேற்றக் கழகம்), இரா. முருகானந்தம் (தலைவர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கழகம்), ஆர். மோகனசுந்தரம் (தலைவர், அகில இந்திய மனித உரிமைகள் கழகம்), து. இரமேசு (புதுச்சேரி செயலாளர், நாம் தமிழர் – தொழிலாளர் நலச்சங்கம்), ஜெ. தனாளன் (பொதுச்செயலாளர், கைவினைஞர் வாழ்வுரிமைக் கட்சி) உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் இரா. வேல்சாமி ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார். தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் நன்றி கூறினார். இவ்வார்ப்பாட்டத்தில், திரளான மெய்யன்பர்கள் பங்கேற்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.