சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆறு மாநிலங்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.தேர்தல் நடைபெறவுள்ள 832 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்களும், 188 காவல்துறை பார்வையாளர்களும், 366 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொது பார்வையாளர்களும், 40 காவல்துறை பார்வையாளர்களும் 151 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப் பார்வையாளர்களும், 4 காவல்துறை பார்வையாளர்களும், 17 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2026 மார்ச் 18-க்குள் (நாளை) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு செல்லுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.பார்வையாளர்கள் அங்கு சென்றதும், தங்களுடைய தொடர்பு விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். மேலும், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள், அல்லது பொதுமக்கள் என யாரேனும் ஒருவரைச் சந்தித்து, தேர்தல் தொடர்பான அவர்களின் குறைகளைக் கேட்டறிய, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் அவர்கள் நிர்ணயிப்பார்கள்.

ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன்

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலம், தனித்த வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் புவிசார் குறியீட்டு சூழலமைப்பை வலுப்படுத்துகிறது

2025-26 நிதியாண்டில், வேளாண்மை, கைவினைப்பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழ்நாட்டின்

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு