🛡️சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.
- அப்போது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தால் தயவு தாட்சயணம் இன்றி மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
- நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத சூழ்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுகிறார்.
- திமுக தோல்வியடைந்த தொகுதியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என தகவல்.
- கட்சியின் கட்டமைப்பில் மீண்டும் சீர்திருத்தம் கொண்டு வரவும் திமுக தலைவர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.







