சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம்

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றதுடன், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொண்டார்.

அந்த வகையில் இன்று ஜப்பானின் டோக்கியோவில் உள்ள முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கேர் இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையை நிறுவிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் அம்மு ஒகடா, செயல் அலுவலர் கசுகோ சூரியாமா, ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் (வியட்நாம்) தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாகுடோ இவனாகா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச