சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டா?

தமிழ் அறிஞர்களான மறைமலையடிகள், பாவலரேறு பெருஞ்சித்தனார் கூறியது…நமது மதம் தமிழர் மதம்…இந்து அல்ல….எல்லாம் ஆரியர்கள் வந்தபின்பு தமிழர் வழிபாட்டு முறைகள் அனைத்தையும் மாற்றி விட்டனர்.இயற்கையை ஐந்திணைகளுக்கு ஒரு தெய்வம் வைத்து வழிபட்டவர்கள் தமிழர்கள்.தமிழர் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது?தையா?சித்திரையா?அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும்…இந்த அறுபது ஆண்டுகளுக்கும்
‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன…இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது…!அனைத்துமே வடமொழிப் பெயர்கள்..!தமிழ் ஆண்டுகள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் கமுக்கம் (இரகசியம்) என்ன?அப்படி இருக்கலாமா?அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமையாய் இருக்குமா?இந்த
அறுபது ஆண்டுச் சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம்.இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது.அறுபது ஆண்டுச் சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம்.இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது.கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு.பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால்
இந்தஆண்டுமுறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலை நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் ஆதிக்குடி (தமிழ்) மக்களின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு.அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது.அறுபது ஆண்டுச் சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது அகவை நிரம்பியவர்கள் ‘சஷ்டியப்த பூர்த்தி’ என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார்.. என்பதை இது குறிக்கிறது.ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும்.அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.ஒருமுறை நாரதமுனிவர், ‘கடவுள்’ கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம்.அதற்குக் கிருஷ்ணன்,”நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம்.இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார்.ஆனால்எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால்,நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து —– கொள்ள விரும்புகிறேன்” என்றார்.கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்”
எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து,ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம்.பின் ‘கடவுள்’ கிருஷ்ணனுடன் அறுபது வருடம் வாழ்ந்து கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றாராம்.அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய எனப் பெயர் பெற்றார்களாம்.இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம்பெற்றார்களாம்..இப்படித்தான் சித்திரை முதல் நாளில் தொடங்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள்.அரசனுடைய அவையில் பெரும் அறிவு படைத்த ‘கணி’கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.அறிவர்கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.ஆரியக் கதை இப்படி இருக்க,தமிழர்கள் காலத்தை வகுத்த முறை பெருவியப்பானது.தமிழர்கள் இயற்கையை மூலமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள்.ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள்…வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள்.அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன.அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.