செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், இ.ஆ.ப. அவர்களை, ‘உன் தேடல் உன்னோடு தான்’ பயிற்சி மையத்தின் நிறுவனர் V.கீதா அவர்கள் இன்று நேரில் சந்தித்து, பூச்செடி வழங்கி மரியாதை நிமித்தமாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பில், அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனரான டாக்டர் கலைமகன் எஸ். வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டு, பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசிக்கும் மக்களின் தேவைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.
மக்களின் தேவைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், விரைவில் பெரும்பாக்கம் பகுதி மக்களை நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, அமைப்பின் நிர்வாகிகள் வேல்முருகன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். பொருள்உள்ளத்தில் இருக்கும்






