சென்னையில் செல்போன் பறித்தவரை விரட்டி பிடித்த போலீசார்

சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செல்போன் பறித்துக் கொண்டு தப்பியோடிய இளைஞரை போலீஸார் விரட்டி பிடித்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு கிரிம்ஸ் சாலையில் சம்பவத்தன்று நடந்து சென்று கொண்டிருந்த சுதீப் முகர்ஜி (21) என்ற இளைஞரின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்து கொண்டு தப்பினர்.
இதையடுத்து அவர் கூச்சல் போடவே, அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த அபிராமபுரம் காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் மற்றும் தினேஷ் ஆகியோர் செல்போன் பறித்து சென்றவர்களை பிடிக்க தங்கள் வாகனத்தில் துரத்தினர். எழும்பூர் நீதிமன்றம் அவர்களை மடக்கி பிடித்தனர்.
அப்போது, பின்னால் அமர்ந்திருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரை பிடித்து ஆயிரம் விளக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த விவேக் (27) என்பதும், அவர் மீது ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் சோதனை நடத்திய போது, அதே நாளில் வழிப் பறி செய்த மேலும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், தப்பி ஓடிய விவேக்கின் நண்பர் விஷ்ணு என்பவரை தேடி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.