சென்னை செம்மொழிப் பூங்காவில் கடந்த 3ம் தேதி முதல் மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட மலர் கண்காட்சியை பார்வையிட விரும்புவோர் இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வசதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 5000 பானை செடிகள், பல்வேறு வகையான பூக்கள், பழங்கள் என ஒரே இடத்தில் இவற்றை காணும் வாய்ப்பு சென்னைவாசிகளுக்கு கிடைத்துள்ளது எனலாம்.
பெரியவர்களுக்கு ரூபாய் 15 மற்றும் குழந்தைகளுக்கு ரூபாய் 10 நுழைவு கட்டணமாக இந்த வசூலிக்கப்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .ரூபாய் 150 மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள் எப்போதும் போல செல்லலாம். இந்த சூழலில் கடந்த 3ம் தேதி தொடங்கிய மலர்க்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே பொதுமக்கள் இறுதி நாளான இன்று மலர் கண்காட்சியை காண உடனே செல்லுங்கள்.







