22.6 26 அன்று சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகியை வழி மடக்கி மர்ம கும்பல் மிரட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டிய சம்பவம் குறித்து மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என திமுக பகுதி செயலாளர் மற்றும் திமுக கவுன்சிலர் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் சைதாப்பேட்டை காவல் நிலையயம் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு
சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கனி (24) இவர் கடந்த வாரம் தஞ்சாவூர் பகுதியில் திமுக கூட்டத்தில துணை முதல்வர் உதயநிதி எனது அண்ணன் என என்று பேசினார். இந்நிலையில் நேற்று மாலை சைதாப்பேட்டை பகுதியிலு உள்ள அவரது நண்பர் இம்ரான் பார்ப்பதற்கு வி. ஜி. பி சாலை வழியாக நடந்து சென்ற போது அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்ம கும்பல் கனியை வழிமடக்கி தஞ்சாவூர் பகுதியில் நடந்த திமுக கூட்டத்தில அருமையாக பேசியதாக கூறி தீடீர் என்று துணை முதல்வர் உதயநீதி உங்க அண்ணனா என மிரட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டி பதாக தெரிகிறது இதனை தொடர்ந்து திமுக பகுதிசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகளுடன் சுமார் 100 க்கும்மேற்பட்டோர் இன்று காலை 10:30 மணி அளவில் திமுகபகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக கவுன்சிலர் ஸ்ரீதர் ஆகியோர் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்தை முற்றிய விட்டதால் சற்று நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து சைதாப்பேட்டை காவல் நிலைய காவல் உயர் அதிகாரிகள் நிர்வாகிகளை சமாதானம் செய்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து முற்றுகை கைவிடப்பட்டது
திமுக முக்கிய நிர்வாகிகள் தலைமைச் செயலர் உறுப்பினர் குணசேகரன் மின்னல் கந்தப்பன் களக்காடி எல்லப்பன் மற்றும் கவுன்சிலர்கள் திரு வழக்கறிஞர் ஸ்ரீதர் மற்றும் மோகன் குமார் கவுன்சிலர் நிர்வாகிகள் வட்டச் செயலாளர்கள் சைமு சேகர் நாகா கோதண்டராமன் கோட்டுபுரம் சண்முகம் வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்








