ஜிம்பாப்வே வெற்றி – ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில்….

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 6 சுற்றில் நேற்று புலவாயோ நகரில் ஜிம்பாப்வே–ஓமன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் 103 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 142 ரன்கள் விளாசினார். இந்தத் தொடரில் அவர், அடித்த 3-வது சதமாக இது அமைந்தது.

சிகந்தர் ராசா 42, லூக் ஜாங்வி 43, கிரெய்க் எர்வின் 25, வெஸ்லி மாதவரே 25, ஜாய்லார்டு கும்பி 21 ரன்கள் சேர்த்தனர். ஓமன் அணி தரப்பில் பயாஸ் பட் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 333 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஓமன் அணி ஒரு கட்டத்தில் 46 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரரான காஷ்யப் பிரஜாபதி 97 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஜதிந்தர் சிங் 2, அகிப் இல்யாஸ் 45, ஜீஷான் மக்சூத் 23, அயன் கான் 47, ஷோயிப் கான் 11, நசீம் குஷி 12, கலீமுல்லா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 53 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மொகமது நதீம், பயாஸ் பட்களத்தில் இருந்தனர். முசரபானி வீசிய 47-வது ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. சதரா வீசிய அடுத்த ஓவரில் பயாஸ் பட் 10 ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 7 ரன் மட்டுமே கிடைத்தது. 49-வது ஓவரை வீசிய ரிச்சர்டு கரவா 3 ரன் மட்டுமே வழங்க ஓமன் அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. சதரா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் 5 பந்துகளில் 14 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் கடைசி பந்தில் மக்சூத் (37) ஆட்டமிழந்தார். முடிவில் ஓமன் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 2 புள்ளிகளை பெற்றது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.