டிஎன்பிஎல் தகுதிச்சுற்று கோவை – திண்டுக்கல் இன்று மோதல்…..

சேலம்: தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் லீக் போட்டியின் 7வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கோவையில் ஜூன் 12ம் தேதி தொடங்கிய தொடரின் லீக் சுற்று நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இதில் பங்கேற்ற 8 அணிகளில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகியவை தலா 7 ஆட்டங்களில் ஆடி தலா 6 வெற்றி, தலா ஒரு தோல்வியுடன் தலா 12 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்தன. நெல்லை கிங்ஸ் 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், மதுரை பேந்தர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் உறுதி செய்தன.

அதனால் இந்த 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. அடுத்த 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், பால்சி திருச்சி ஆகியவை லீக் சுற்றுடன் வெளியேறின. சேலத்தில் இன்று நடைபெறும் முதல் தகுதிச் சுற்றில் கோவை கிங்ஸ், முன்னாள் சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகியவை மோதுகின்றன. தொடர்ந்து நாளை சேலத்தில் நடைபெறும் வெளியேற்றும் சுற்றில் நெல்லை, முன்னாள் சாம்பியன் மதுரை ஆகியவை களம் காணுகின்றன. திருநெல்வேலியில் ஜூலை 10ம் தேதி 2வது தகுதிச் சுற்று ஆட்டமும், ஜூலை 12ம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெறும். கோவை-திண்டுக்கல்
டிஎன்பிஎல் தொடரில் கோவை, திண்டுக்கல் அணிகள் இதுவரை 7முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் திண்டுக்கல் 4-3க்கு என முன்னிலை வகிக்கிறது. நடப்புத் தொடரில் நடந்த லீக் ஆட்டத்தில் கோவை 59ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தியது.

அஷ்வின், சாய் இல்லை
திண்டுக்கல் அணிக்காக விளையாடிய கேப்டன் அஷ்வின் இப்போது இந்திய அணியில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளார். கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடிய சாய் சுதர்சனும், பெங்களூரில் நடைபெறும் துலீப் கோப்பை தொடரில் தென் மண்டல அணிக்காக களம் கண்டுள்ளார்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்