ட்விட்டருக்கு பெண் தலைமை : எலான் மஸ்க் அறிவிப்பு

ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிதாக பெண் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ட்விட்டர் மிகவும் பிரபலமான ஒன்று. முதலில் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த, பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர்.

அதன்பின்னர் உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தை 45 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். ட்விட்டரை கைப்பற்றிய உடன் எலான் மஸ்க், பல்வேறு அதிரடி நடவடிகைகளில் ஈடுபட்டனர். முதல் நடவைக்கையாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதன்பிறகு புதிய சி.இ.ஓ பதவி காலியாகவே இருந்து வந்தது.

புதிய நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிதாக பெண் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக (அந்த நபரின் பெயரை குறிப்பிடாமல்) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அறிவித்துள்ள அவர், “ட்விட்டருக்கு புதிய பெண் தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார்.. தயாரிப்பு மென்பொருள் நிர்வாக தலைவர் மற்றும் தகவல் தொழில்நுட்ப தலைவராக தனது பங்களிப்பு இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ட்விட்டருக்கு புதிய சி.இ.ஓவாக என்.பி.சி யுனிவர்சல் நிறுவன தலைவர் லிண்டா யாக்கரினோ (Linda Yaccarino) நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.