சென்னை:
சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றைய தினம் கிலோ ரூ.120க்கு விற்பனையான முதல் ரக தக்காளி, இன்று ரூ.10 உயர்ந்து, ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியின் விலை உயர்வு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வழக்கமாக ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தக்காளியின் விலை உயர்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்த ஆண்டு தக்காளியின் விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று முதல் ரக தக்காளி ரூ.10 உயர்ந்து, ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.120க்கு விற்பனையான முதல் ரக தக்காளி ரூ.10 உயர்ந்துள்ளதால் தக்காளி வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





