தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை:
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் குறைந்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு கடந்த ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கங்கள்.
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது. போதை பொருள் நடமாட்டம் குறைய அக்கறையோடும், பொறுப்போடும் செயல்படும் காவல்துறைக்கு எனது நன்றிகள். இதே ஆர்வத்தோடு செயல்பட்டு முற்றிலுமாக போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது மருத்துவர்களும், பொதுமக்களும் இது சிறப்பான திட்டம் என்றார்கள். போதைப் பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.ஆட்சிக்கு வந்த நாள் முதல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் நாங்கள் தீவிரமாக இறங்கி உள்ளோம்.
போதைப்பொருட்கள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும்; போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. போதைப் பொருட்களை விற்பனை செய்வோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்